வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் அங்கமாக செய்ல்பட்டு வரும் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா நிறுவனங்கள் இந்தியாவின் பிரிமீயம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும் என்பதால் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

புதிதாக ஸ்கூட்டர் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ.10,000 வரை சேமிப்பை பெறுவதற்கான திட்டங்களை இந்த நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

புதிய வெஸ்பா அல்லது ஏப்ரிலியா ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இதில், இலவச இன்ஸ்யூரன்ஸும் அடங்கும். மேலும், ரூ.4,000 மதிப்புக்கு ஆக்சஸெரீகள் அன்பளிப்பாக வழங்கப்படும்.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. மேலும், முதல் ஓர் ஆண்டுக்கு கட்டணமில்லா பராமரிப்புத் திட்டத்தையும் வழங்குவதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

மேலும், 5 ஆண்டுகளுக்கான வாரண்டி மற்றும் 2 ஆண்டுகளுக்கான சாலை அவசர உதவி திட்டத்தை இலவசமாக பெறும் வாய்ப்பும் உள்ளது. நாடுமுழுவதும் அனைத்து டீலர்களிலும் இந்த சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஆகிய ஸ்கூட்டர்கள் மோனோகாக் ஸ்டீல் பாடியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், யுஎஸ்பி மொபைல் சார்ஜர் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களில் அலாய் வீல்கள், அகலமான டயர்கள், ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு கிடைக்கின்றன.

வெஸ்பா, ஏப்ரிலியா ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிப்பு!

ஏப்ரிலியா எஸ்ஆர் 160 மற்றும் எஸ்ஆர் 125 ஸ்கூட்டர் மாடல்கள் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின், அலாய் வீல்கள், அகலமான டயர்கள், ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ட்வின் காலிபர் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கின்றன. ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் அல்லது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
Piaggio has announced huge savings offer for Vespa and Aprilia scooter models ahead festive season.
Story first published: Tuesday, October 13, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X