6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

பியாஜியோ நிறுவனம் புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் ப்ளஸ் மூன்று சக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் புதிய கார்கோ ரகத்திலான அபோ எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் ப்ளஸ் மூன்று சக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார்கோ ரக மூன்று சக்கர வாகனம் 6 அடி நீளம் கொண்டது ஆகும். இதற்கு 2.65 லட்ச ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் உள்ள பியாஜியோ விற்பனையாளர்களை புதிய மூன்று சக்கர வாகனத்திற்கான புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், ஆன்லைன் வாயிலாகவும் புக்கிங் வசதியை பியாஜியோ ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

முன்னதாக அபே எக்ஸ்ட்ரா சிவி 5 மற்றும் 5.5 அடி நீளத்தில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வாகனம் முதல் முறையாக 6 அடி நீளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், கூடுதல் பொருட்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும்.

6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

இத்துடன், சற்று கூடுதல் திறன் கொண்ட எஞ்ஜினையும் பியாஜியோ புதிய மூன்று சக்கர வாகனத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, புதிய அபே எக்ஸ்ட்ரா எல்டிஎக்ஸ் பிளஸ் கார்கோவில் 599சிசி திறன் கொண்ட எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது 5 ஸ்பீடு வேகக் கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும்.

6 அடி நீளத்தில் புதிய பியாஜியோ மூன்று சக்கர வாகனம் அறிமுகம்... இந்த கார்கோ வாகனத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் மூன்று சக்கர வாகனங்களைக் காட்டிலும் அதிக மைலேஜ், அதிக டார்க் மற்றும் ஸ்மூத்தான டிரைவிங் அனுபவம் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், கமர்சியல் வர்த்தகத்தில் இந்த புதிய புது சாதனையைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Launched Ape Xtra LDX+ 6-Feet Cargo Three-Wheeler In India: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, December 8, 2020, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X