ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

சில தினங்களுக்கு முன்பு, ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான ப்ரான்கோ பெயர்பலகை சுமார் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய தலைமுறை ப்ரான்கோ மாடல் மூலமாக திரும்ப சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் புதிய ப்ரான்கோ மாடலின் பிக்அப் ட்ரக் வெர்சனின் தயாரிப்பு பணியிலும் ஃபோர்டு நிறுவனம் ஈடுப்பட துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஃபோர்டு நிறுவனம் 60களில் இருந்து ப்ரான்கோ மாடல்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான புதிய ப்ரான்கோ விற்பனையில் ஜீப் வ்ராங்க்லருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. 2-கதவு, 4-கதவு போன்றவற்றுடன் ப்ரான்கோ ஸ்போர்ட் வெர்சனிலும் இந்த புதிய தலைமுறை விற்பனை செய்யப்படுகிறது.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதில் ஸ்போர்ட் வெர்சன் ஃபோர்டு எஸ்கேப் மாடலை போன்று ஒற்றை-உடல் கட்டுமானத்திலும், மற்றவை ரேஞ்சரை போன்று பாராம்பரியமான பாடி-ஆன்-ஃப்ரேம் லேஅவுட்டின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதற்கிடையில் துவங்கப்பட்ட 2021 ஃபோர்டு ப்ரான்கோ முதல் எடிசனிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள்ளாக நிரம்பிவிட்டன. இதனால் தயாரிப்பு நிறுவனம் இதன் தயாரிப்பு யூனிட்களின் எண்ணிக்கையை 3,500-ல் இருந்து 7,000 ஆக அதிகரித்துள்ளது.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதற்கு மத்தியில் தான் தற்போது ஃபோர்டு நிறுவனம் ஆஃப்-ரோடு வாகனமான ப்ரான்கோவின் பிக்அப் ட்ரக் வெர்சன்களை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல்மக் என்ற செய்தி தளம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில் இந்த புதிய ட்ரக் ஜீப் க்ளாடியேட்டர் மாடலுக்கு சரியான போட்டியாக விளங்கும் என தெரிவித்துள்ளது.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதனால் இப்போதே புதிய ப்ரான்கோ பிக்அப் ட்ரக் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு தொற்றிவிட்டாலும், இந்த புதிய மாடல் 2024ல் தான் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் ப்ரான்கோ ஆஃப் ரோடு வாகனத்திற்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்துவந்தால், புதிய ட்ரக் 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூட அறிமுகமாக வாய்ப்புள்ளது.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

ஜீப் க்ளாடியேட்டரின் தோற்றத்திற்கு இணையான டிசைனில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய பிக்அப் ட்ரக் மாடலில் வழக்கமான ப்ரான்கோ மாடலின் உள்ளமைவுகள் தான் இடம்பெற்றிருக்கும். அதேபோல் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு தற்போதைய 2.3 லிட்டர் மற்றும் 2.7 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின்கள் அப்படியே பயன்படுத்தப்படலாம்.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இதில் 4-சிலிண்டர் அமைப்பை கொண்ட 2.3 லிட்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 270 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுவே 2.7 லிட்டர் வி6 என்ஜின் ஆனது 310 பிஎச்பி மற்றும் 542 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வாகனத்திற்கு வழக்கும்.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

இவற்றுடன் விரைவில் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 என்ஜின் தேர்வுடன் ராப்டார் வேரியண்ட்டையும் ப்ரான்கோ ஆஃப்-ரோடு மாடல் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்அப் ட்ரக்கில் 5.0 லிட்டர் வி8 என்ஜின் தேர்வும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜீப் க்ளாடியேட்டருக்கு போட்டியாக புதிய ஃபோர்டு ப்ரான்கோ பிக்அப் ட்ரக்.. அறிமுகம் எப்போது தெரியுமா..?

அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்திற்கு ஆற்றலை வழங்குவதற்காக 7-ஸ்பீடு மேனுவல் மற்றும் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் புதிய பிக்அப் ட்ரக்கிற்கு கொடுக்கப்படலாம். க்ளாடியேட்டருக்கு போட்டி என்பதால் இந்த ட்ரக்கின் விலையை 30,000 டாலர்களில் (ரூ.22.45 லட்சம்) ஃபோர்டு நிறுவனம் நிர்ணயிக்கும் என தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Bronco Pickup Truck In The Works; To Rival Jeep Gladiator
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X