குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இந்தியாவில் அடுத்ததாக டொயோட்டா அறிமுகப்படுத்தவுள்ள இன்னோவா க்ரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

தற்சமயம் விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கடந்த 2016ல் இருந்து இந்தியாவில் விற்பனையில் உள்ளது. நம் நாட்டில் டொயோட்டாவின் பிரபலமான மாடல்களுள் ஒன்றாக விளங்கும் இந்த எம்பிவி காருக்கு நேரடி போட்டி கார்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இதுவே இதன் பிரபலத்திற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த நிலையில் இன்னோவாவின் ஆயுட்காலத்தை இந்தியாவில் அதிகப்படுத்தும் விதமாக இந்த காரில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இதற்கிடையில் தான் தற்போது இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் வெளிநாட்டை சேர்ந்த ஹம்3டி என்ற இணையத்தளம் மூலமாக கிடைத்துள்ளன.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

ஃபேஸ்லிஃப்ட் வெர்சனிற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த எம்பிவி கார் முன்பக்கத்தில் புதிய பம்பர் உடன் ரீடிசைனில் ஹெட்லைட்கள் மற்றும் முன் க்ரில் உள்ளிட்டவற்றை கொண்டிருப்பதை இந்த படங்களின் மூலமாக அறிய முடிந்தது. இவை மட்டுமின்றி புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் பெரிய டெயில்லைட்களையும் பார்க்க முடிந்தது.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

மற்றப்படி காரின் மொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதன் காரணமாக பரிணாம அளவுகளில் தற்போதுள்ள இன்னோவாவுக்கும் விரைவில் வரவுள்ள இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது. ஆனால் உட்புற கேபினில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

கேபினின் டிசைன் பெரிய அளவில் மாற்றமடைந்து இருக்காது என்றாலும், புதிய வசதிகளும் தொழிற்நுட்பங்களும் சேர்க்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், புதிய மற்றும் பெரிய தொடுத்திரை உடன் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இந்த அப்கிரேட்களுடன் உட்புறத்தில் வயர் இல்லா மொபைல் சார்ஜிங் மற்றும் 360-கோண பார்க்கிங் கேமிரா போன்றவற்றையும் இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம். இயக்க ஆற்றலை வழங்கும் என்ஜின் அமைப்புகளில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. இந்த வகையில் வழக்கமான அதே இரு என்ஜின் தேர்வுகளை தான் இன்னோவா ஃபேஸ்லிஃப்ட் காரும் தொடரவுள்ளது.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இதில் ஒன்றான 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 166 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. அதேநேரம் 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும்.

குறையும் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனை... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் டொயோட்டா...

இந்த இரு என்ஜின்களையும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் இன்னோவாவில் பெறலாம். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா இந்தியாவிற்கு இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Pictures of the Toyota Innova Crysta have leaked online.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X