பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி?

பிரபல அரசியல்வாதிகளைப் பற்றிய வெளிவராத தகவல்கள் சில தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

இந்தியாவில் பதவி, செல்வம், பெண் ஆகியவற்றின் மீதுகூட ஆசைப்படாவதர்களை நம்மால் பார்த்து விட முடியும். ஆனால், வாகனங்களின் மீது ஈர்ப்பு இல்லாதவர்களைக் காண்பது மிக மிக அரிது. அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைத்து வகுப்பினருக்கும் இருக்கும் அடிப்படை ஆசைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. எனவேதான் முந்தைய காலங்களில் வீட்டுக்கு ஒன்று என காணப்பட்ட வாகனங்கள், தற்போது தலைக்கு ஒன்று என காட்சியளிக்கின்றது.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

சில வசதிப்படைத்தவர்கள் இல்லத்தில் தலைக்கு இரண்டு, மூன்று என்றும்கூட அவை காட்சியளிக்கின்றன. அந்தளவிற்கு மனித உள்ளங்களைக் கவர்ந்த ஒன்றாக இருக்கின்றது, வாகனங்கள்.

இவை சாதாரண மனிதர்களை மட்டுமின்றி சில முக்கிய பிரபலங்களையும் மடக்கிப்போட தவறுவதில்லை. ஆம், இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் வாகனங்கள் மீது கொள்ளை பிரியம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

எனவேதான், வாகனங்களை இயக்க டிரைவர்கள் பலர் லட்சக்கணக்கான சம்பளத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான வாகனங்களை இயக்கும்போது மட்டும் டிரைவர்களின் உதவியின்றி அவர்களே இயக்க ஆரம்பிக்கின்றனர்.

இதில், அரசியல் பிரபலங்களும் அடங்குவர். என்னங்க தலைப்புல எதோ பெருசா சொல்லிட்டு, உள்ள எதை எதையோ சொல்றீங்க என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். அதற்கான விளக்கம் பின்வருமாறு...

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

நம் நாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அதிக செல்வாக்குக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் இருப்பதைப் போன்றே ஏராளமான பகைவர்களும் இருக்கின்றனர். இதுபோன்ற ஓர் சூழலில் சொந்த வாகனத்தை, முன்னிருக்கையில் அமர்ந்து இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

ஆகையால்தான் அரசியல் பிரபலங்கள் வாகனத்தை இயக்குவதை நாம் ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் உள்ள எந்தெந்த அரசியல் பிரபலங்கள் அவர்களது கார்களை அவர்களே இயக்குகின்றனர் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

இந்த லிஸ்டில் தெலுங்கு திரைநட்சத்திரம் மற்றும் அரசியல் பிரபலமான பவன் கல்யாண் முதல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரை இடம்பெற்றிருப்பது மிகுந்த ஆச்சரியமான ஒன்று. சரி, வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray)

மஹாராஷ்டிரா மாநிலத்தின் 19 முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவர் உத்தவ் தாக்கரே. இவருக்கு அம்மாநிலத்தில் ஏராளமான தொண்டர்கள் இருக்கின்றனர். எனவே, இவரை சமூக வலைதளத்தில் பின்பற்றுபவர்கள் ஏராளம்.

உத்தவ் தாக்கரே தனது பெரும்பாலான பயணங்களில், அவரே அவரது காரை இயக்குவதாக கூறப்படுகின்றது. அதற்கேற்ப, கேமிராவின் கண்களில் பலமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது சிக்கியிருக்கின்றனர்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் அவர் இதுபோன்று காரை இயக்கும் செயலைத் தொடர்ந்து வருவதாக மஹாராஷ்டிரா ஊடக வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறு, அவர் வெளியில் வலம் வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர அவரிடத்தில் ரேஞ்ஜ் ரோவர் லேண்ட் ரோவர் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இவையிரண்டும் கணிசமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட கார்களாகும்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

தற்போது, இந்தியாவில் வைரஸ் பிரச்னை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருப்பதால் காரில் அவரை தவிர வேறு யாரையும் பாதுகாப்பு அதிகாரிகள் சேர்ப்பதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைதான் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் விரும்புபவதாக கூறப்படுகின்றது. எனவே, அவரது பெரும்பாலான பயணங்களில் அவரே கார்களை இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

ராஜ் தாக்கரே (Raj Thackeray)

மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. இவர், தற்போதைய மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் உத்தவ் தாக்கரேவின் குடும்பத்தினர் (சகோதரர்) ஆவார். இவரும் தனது பெரும்பாலான பயணங்களில் கார்களை அவரே இயக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். இவரிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

ஓமர் அப்துல்லா (Omar Abdullah)

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் பெரும்பாலும் அவரது காரை அவரே இயக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கின்றார். குறிப்பாக, சட்டப்பேரவைக்கு செல்லும்போது மற்றும் மக்களைச் சந்திக்க செல்லும்போது இவ்வாறு தனித்து செல்வதாக கூறப்படுகின்றது. இவர் மிகவும் பழமையான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகின்றார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

இந்த காரை தன்னை தவிர மற்ற எவரையும் இயக்க ஓமர் அப்துல்லா அனுமதிப்பதில்லை. அவர் கார்களை இயக்குவதில் நன்கு கை தேர்ந்தவர் என தெரிகின்றது. எனவேதான் எப்போதும் அவருடைய கார்களை அவரே இயக்கி வருகின்றார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதிகம் பணி நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பகுதியில் வாகனங்களை இயக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கு நல்ல மன தைரியம் மற்றும் நல்ல பயிற்சியும் தேவைப்படுகின்றது.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

பெமா காண்டு (Pema Khandu)

தற்போதைய அருணாச்சல முதலமைச்சராக இருப்பவர் பெமா காண்டு, இவரிடத்தில் போலரிஸ் போன்ற ஏடிவி ரக வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இது பாலை வனம், கடற்கரை மற்றும் பனி மிகுந்த பகுதிகளில் பயணிக்கும் திறன் கொண்ட வாகனம் ஆகும். எனவே, ஹிமலயா போன்ற பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்க பெமா காண்டு இந்த வாகனத்தை பயன்படுத்தி வருகின்றார். அப்போது அந்த வாகனத்தை அவரே இயக்குவார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, அவரின் பயணத்தின்போது கார்களையும் அவரே இயக்கி வருகின்றார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia)

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் இக்கட்சியை விட்டு விலக இருப்பதா சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்தியாவில் தனது கார்களை தானே இயக்கும் அரியல்வாதிகளில் இவரும் ஒருவர் ஆவார். இவரிடத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் பயன்பாட்டில் இருக்கின்றது. இது பழைய தலைமுறை மாடல் ஆகும். இதைதான் தனது பெரும்பாலான பயணங்களில் அவர் பயன்படுத்தி வருகின்ரார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

சச்சின் பிலோட் (Sachin Pilot)

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமான அரசியல்வாதிகளில் சச்சின் பிலோட்-ம் ஒருவர். இவர் வாகனங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார். எனவே, எப்போதும் அவரது பயணங்களில் அவரே கார்களை இயக்கி வருகின்றார். இதற்காக அவர் டொயோட்டா பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகின்றார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

கிரன் ரிஜ்ஜிஜூ (Kiren Rijjiju)

காங்கிரஸ் கட்சியில் எப்படி ஒரு நபர் வாகன பிரியராக இருக்கின்றாரோ அதேபோன்று பிஜிபி கட்சியிலும் அதிக வாகன மோகம் கொண்டவராக கிரன் ரிஜ்ஜிஜூ இருக்கின்றார். இதற்கு அவரிடத்தில் இருக்கும் முற்றிலும் வித்தியாசமான வாகன கலக்சனே சான்று. இவரிடத்திலும் போலரிஸ் ஏடிவி ரக வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றது. இது பனி மிகுந்த பகுதிகளில் பயணிக்கும் திறனைக் கொண்டிருப்பதால் இதனை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

குறிப்பாக, ஏடிவி வாகனத்தையும்கூட கிரன் ரிஜ்ஜிஜூவே இயக்குவது ஆச்சரியமான தகவல். இதுமட்டுமின்றி, கார்களில் பயணிக்கும்போதும் அவற்றையும் அவரை இயக்கி வருகின்றார். இவர் ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் கார்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

பிரியங்கா காந்தி வத்ரா (Priyanka Gandhi Vadra)

இந்தியாவில் மிகவும் துடிப்பாக செயல்படும் பெண் அரசியல்வாதிகளில் பிரியங்கா காந்தியும் ஒருவர். ஆனால், இவர் எந்தவொரு பெண் அரசியல்வாதியும் செய்யாத வகையில், அவரது கார்களை அவரே இயக்கி வருகின்றார். குறிப்பாக, வாக்கு சேகரிப்பு மற்றும் மக்கள் சந்திப்பு நேரங்களில் மிகவும் எளிமையான முறையில் பொதுமக்களைச் சந்தித்து வருகின்றார். அவ்வாறு, அவர் தனித்து பயணிக்கும்போது டொயோட்டா குவாலிஸ் போன்ற மிகவும் சாதாரண கார்களையேப் பயன்படுத்துகின்றார். சில நேரங்களில் இவரது பயணத்தில் அவரது அம்மா சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி இடம்பெறுவது வழக்கம்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

ராகுல் காந்தி (Rahul Gandhi)

பிரியங்கா காந்தியைப் போலவே ராகுல் காந்தியும் தனது பெரும்பாலான பயணங்களில், அவரே கார்களை இயக்கி வருகின்றார். இவர் தனியாக காரை இயக்கினாலும், இந்தியாவின் முக்கியமான அரசியல் பிரபலங்களில் இவரும் ஒருவர் என்பதால் இவரைச் சுற்றி ஏராளமான பாதுகாப்பு பணியாளர்கள் இருந்து வருகின்றனர். இருப்பினும், டாடா சஃபாரி காரில் கெத்தாக அவர் வலம் வரும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றார். பெரும்பாலான நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் தனது தாய் சோனி காந்தியுடன் அவர் வெளியில் தென்பட்டு வருகின்றார்.

பிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி பிரம்மிப்பா இருக்கே!

பவன் கல்யாண் (Pawan Kalyan)

தெலுங்கு உலகின் ஸ்டார், அரசியல்வாதி என பல ரோல்களைக் கொண்டவர் பவன் கல்யாண். இவரும் அவரது காரை அவரே இயக்குபவராக இருக்கின்ரார். இவரிடத்தில் ஜி-வேகன் கார் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரைதான் அவர் இயக்கும்போது பயன்படுத்துகிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Politicians Who Drive Their Own Cars. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X