பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

பழமையான போர்ஷே 914 மாடல் கார் மீண்டும் சந்தைக்கு வரவுள்ளதாக ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் தலைமை டிசைன் பிரிவு அதிகாரி மைக்கேல் மையுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

போர்ஷே 914, இரு இருக்கைகளை மட்டுமே கொண்ட மிட்-என்ஜின் ஸ்போர்ட்ஸ் வகை காராகும். ஃபோக்ஸ்வேகன் மற்றும் போர்ஷே நிறுவனங்களின் கூட்டணியால் தற்போது மீண்டும் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார் 1969- 1976 காலக்கட்டத்தில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் மாடல்களுள் ஒன்றாக விளங்கியது.

இந்த காலக்கட்டத்தில் மொத்தமாக 1.18 லட்ச போர்ஷே 914 மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விலையுயர்ந்ததாக, அதேசமயம் 911 ரேஞ்சை விட அதிகமாக இல்லாமல் இருக்கும் கார்களை விரும்பும் எண்ட்ரீ-லெவல் வாடிக்கையாளர்களை குறிக்கோளாக வைத்துதான் இந்த போர்ஷே 914 மாடல் அந்த நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

டிசைன் அப்டேட்களுடன் இதன் மறு அறிமுகம், ஸ்போர்ட்ஸ் கார்களை வடிவமைக்க எண்ணும் டிசைனர்களுக்கு பல யோசனைகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். பாக்ஸ்டர் மற்றும் கேமேன் மாடல்களை போன்று எண்ட்ரி லெவல் மாடலாக இருந்தாலும் போர்ஷே நிறுவனத்தின் தயாரிப்பு கார்களின் வரிசையில் இந்த 911 ரேஞ்ச் மாடல் முன்னிலையில் நிலைநிறுத்தப்பட்டது.

இன்று வரையிலும் போர்ஷே 914 மாடல் கார் விலையுயர்ந்ததாக மதிப்பிடப்படுவதால், போர்ஷே நிறுவனம் பழைய 914 வரிசை மாடல்களில் மற்றொரு காரையும் மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

இதற்கிடையில் இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் போர்ஷே நிறுவனம், 914 மாடலை பற்றியும் அதன் வரலாற்றை பற்றியும் மற்றும் கார் தயாரிப்பில் தங்களது நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றியும் விரிவாக கூறியுள்ளது.

இதே பேட்டியில் தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மைக்கேல் மையுர் எதிர்கால மிட்-என்ஜின் 914 மாடலை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், விலை குறைந்த, எண்ட்ரி-லெவல் போர்ஷே கார் தயாரிப்புக்கு கொண்டுவருவது சரியான ஒன்றாக இருக்கும் என்றார்.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

இவரது இந்த கருத்தால் போர்ஷே நிறுவனம் 914 மாடலை மீண்டும் கொண்டுவரவுள்ளது என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர், இதுகுறித்து நாங்கள் பல முறை ஆலோசித்துள்ளோம். மாடர்ன் 550, மிகவும் எளிமையான காராகும் எனவும் கூறினார்.

மேலும் போர்ஷே நிறுவனம் பழைய 914 மாடலை இரு விதமான தொழிற்நுட்பங்களில் தயாரிக்கவுள்ளதையும் மைக்கேல் மையுர் சூசமாக தெரிவித்துள்ளார். இதில் ஒன்று அவர் கூறியதுபோல், எந்தவொரு எலக்ட்ரிக்கல் பாகமும் இன்றி முழுக்க முழுக்க இயந்திர பாகங்களால் உருவாக்கப்படவுள்ளது.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

மற்றொன்று ஆடி டிடி ஆர்எஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆர்32 உள்ளிட்ட மாடல்களை இயக்க விரும்புவோருக்காக தயாரிக்கப்படவுள்ளது. மற்றப்படி இந்த பழமையான ஸ்போர்ட்ஸ் ரக காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் குறித்த எந்த தகவலும் இல்லை. எப்படியிருந்தாலும் மீண்டும் சந்தைக்கு வரும் 914 மாடல் எலக்ட்ரிக் வாகனமாக இருக்காது என்பது மட்டும் உறுதி.

இதுகுறித்து தனது முதல் அறிக்கையில், விரைவில் அறிமுகமாகவுள்ள கார் இயந்திர பாகங்கள் மற்றும் முற்றிலும் எலக்ட்ரிக் அல்லாத பாகங்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் என கூறியிருந்த மைக்கேல் தனது இரண்டாவது அறிக்கையில் ஒருபடி மேலே சென்று, இந்த கார் பெட்ரோல் என்ஜினை கொண்டதாக இருக்கும் என மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பு பணியில் மீண்டும் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...

ஆடி டிடி ஆர்எஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஆர்32 மாடல்களை போன்று போர்ஷே பாக்ஸ்டர் மற்றும் கேமேன் கார்களும் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்திருந்தது. இருப்பினும் இந்த 718 மாடல்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எலக்ட்ரிக் வாகனங்களாக சந்தையில் களமிறங்கவுள்ளன.

இந்த 914 ஸ்போர்ட் காரில் பெட்ரோல் என்ஜினை வழங்குவதில் தான் போர்ஷே நிறுவனம் மும்முரமாக உள்ளது. இது தவிர தற்போதைய மாடல்களில் உள்ள 4-சிலிண்டர் என்ஜின்களும் போர்ஷேவின் இந்த பழமையான காருக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

நமக்கு இத்தகைய தகவல்களை வழங்கியுள்ள மைக்கேல் மையுர் உலக அளவில் புகழ்பெற்ற ஆட்டோமோட்டிவ் டிசைனர்களில் ஒருவர். இதற்கு முன்னர் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்கே மாடலை வடிவமைத்திருந்த இவர் இவ்வாறு எரிபொருள் என்ஜின் காரை பற்றி பேசுவது, தொடர் எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்களால் எரிச்சல் அடைந்து இருப்பவர்களுக்கு சற்று சந்தோஷத்தை வரவழைத்திருக்கும்.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche 914 Successor In The Works: Entry-Level, Purists’ Car From Porsche Coming Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X