ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்! அப்படி ஒரு அம்சங்களுடன் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக்!

போர்ஷே பனமேரா 4 10 இயர் எடிசன் காரின் ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கின்றது என்பதை விளக்கும் விதமாக இந்த பதிவைத் தொகுத்து வழங்கியுள்ளோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே, அதன் முதல் 'பனமேரா 4 10ம் ஆண்டு எடிசன்' காரை மிக சமீபத்தில் பெங்களூருவில் வைத்து அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் குழுவும் கலந்துக் கொண்டது. அப்போது இக்கார் பற்றி கிடைத்த சுவாரஷ்ய தகவல்களையே உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்த பதிவில் தொகுத்து வழங்கயுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

பனமேரா 4 10ம் ஆண்டு எடிசன் ஓர் லக்சூரி ஸ்போர்ட்ஸ் ரக காராகும். இக்கார் ரூ. 1.60 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதன் விலையைப் போலவே திறன், சொகுசு வசதி மற்றும் தொழில்நுட்பத்தில் வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளது. பனமேரா காரின் பத்து ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக பனமேரா 4 10 ஆண்டு எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இக்கார் 2009ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவரை, இக்கார் ஒட்டுமொத்தமாக 2.50 லட்சம் யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இது பனமேரா காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதற்கான சான்றாக இருக்கின்றது. நான்கு கதவுகளைக் கொண்ட இந்த கார் அதிக லக்சூரி, கம்ஃபோர்டான வசதியைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பழைய மாடல் பனமேரா காரைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகளைப் பெற்ற காராக புதிய பனமேரா 4 10இயர் எடிசன் இருக்கின்றது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

டிசைன் மற்றும் ஸ்டைலிங்:

நமது குழு இக்காரை அலசி ஆராய்ந்ததில், பெரிய அளவில் அப்டேட் வழங்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இருப்பினும் ஒரு சில பாகங்கள் மாற்றத்துடன் காணப்படுவதை நம்மால் காண முடிகின்றது. அதாவது, பனமேராவின் வழக்கமான தோற்றத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் புதிய அப்கிரேட் வழங்கப்பட்டிருக்கின்றது. வாருங்கள் காரின் முன் பகுதியில் இருந்து செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

ஹெட்லைட், பனமேரா 4 10 ஆண்டு பதிப்பில், பிராண்டின் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பிடிஎல்ஸ் பிளஸ் (Porsche Dynamic Lighting System) தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும், இக்கார் ஸ்பெஷல் எடிசன் என்பதால் ஸ்பெஷலான அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது 21 இன்ச் அலாய் வீல் ஆகும்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

சேடின் குளாஸ் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் இது காட்சியளிக்கின்றது. மேலும், இது பத்தாம் ஆண்டு எடிசன் என்பதால் 'பனமேரா 10' எனும் லோகோக்கள் காரின் டூர்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த பேட்ஜ்களும் வெள்ளை-தங்கம் நிறத்தில் வீலுக்கு மேட்சாக பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் ரூஃபிற்கு கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த வெவ்வேறு நிற கலவை அனைத்தும் சேர்ந்து அக்காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. காரின் பின்பகுதியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஆகையால், பழைய மாடலில் காணப்பட்டதைப் போலவே பின்பகுதியை ஒட்டுமொத்தமாக இணைக்கும் வகையில் எல்இடி சிவப்பு மின் விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இத்துடன், 3டி தொழில்நுட்பம் கொண்ட போர்ஷே பேட்ஜ்கள் பின் பக்கத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இத்துடன், பின் பகுதியில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக இரட்டை குழாய் புகைப்போக்கும் அமைப்பு உள்ளது. இது ஸ்போர்ட் லுக் மற்றும் எக்சாஸ்ட் சப்தத்தை வெளியேற்றும். ஆகையால், இக்கார் கண்ணில் தெண்படுவதற்கு முன்பே எக்சாஸ்டின் சத்தம், இந்த கார் எங்கு இருக்கின்றது என தேட வைத்துவிடும்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

உட்புறம் மற்றும் சிறப்பு அம்சங்கள்:

காரின் உட்பகுதியை பிரத்யேகமானதாகவும், ஹைலைட்டானதாகவும் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 'பனமேரா 10' என உலோகதக்தால் எழுதப்பட்ட லோகோ டூர் சில்ஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதே லோகோதான் முன் பயணிகள் டிரிம் பேனலிலும் ஒட்டப்பட்டுள்ளன.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

மேலும் காரை எக்ஸ்குளூசிவானதாக காட்ட 'வெள்ளை தங்க மெட்டாலிக்' ஃபினிஷங் கொண்ட பேட்ஜ்கள் காருக்குள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், காரின் உட்புறத்தை பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கும் விதமாக லெதர் போர்வை காரின் இருக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது பிற கார்களைக் காட்டிலும் மிருதுவானதாகவும், அதிக சொகுசு நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்றது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இந்த இருக்கைகளின் தையல் வேலைக்குகூட வெள்ள தங்கம் நிறமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காரின் தரத்தை உயர்த்திக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், 14 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய இருக்கை, டிஜிட்டல் ரோடியோ, போஸ் சவுண்ட் சிஸ்டம், சாஃப்ட் குளோஸ் டூர்ஸ் மற்றும் ஹெட் ரெசிஸ்டண்ட் உள்ளிட்டவை பனமேரா 4 10 இயர் எடிசனில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

மேலும், அனலாக் ரெவ் கவுண்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், இரு இருக்கைகளுக்கும் முன்பும் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், 12 இன்ச் அளவுகொண்ட உயர் வகை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி பங்க்ஷன் திறனுடைய ஸ்டியரிங் வீல், தொடு திரை டிஸ்பிளே உள்ளிட்டவையும் பிரீமியம் வசதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இதுதவிர, 4 மண்டல காலநிலை கட்டுப்பாடு, பார்க் அசிஸ்ட், லேன் சேஞ்ஜ் அசிஸ்ட், சிறப்பு சஸ்பென்,ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ரிவர்சிங் கேமிரா மற்றும் பவர் ஸ்டியரிங் பிளஸ் உள்ளிட்ட எக்கசக்கமான தொழில்நுட்ப வசதிகளும் போர்ஷே பனமேரா 4 10 இயர் எடிசனில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

எஞ்ஜின் & செயல்திறன்

இயந்திரத்தை பொருத்தவரை போர்ஷே பனமேரா 4 10 இயர் எடிசன், தற்போது விற்பனையில் இருக்கும் கார்களைப் போன்றே காட்சியளிக்கின்றது. அதாவது, சிறப்பு எடிசன் என்பதற்கான எந்தவொரு சிறப்பு வசதியையும் இதன் எஞ்ஜின் பெறவில்லை. ஆகையால், வழக்கமான பனமேராவில் காணப்படக்கூடிய அதே 2.9 லிட்டர் பை-டர்போ வி 6 எஞ்ஜினே இதிலும் காணப்படுகின்றது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

இது, 5200 ஆர்பிஎம்மில் 326 பிஎச்பி ஆற்றலையும், 1750 ஆர்பிஎம் 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த நிறுவனத்தின் பிடிகே டிரான்ஸ்மிஷன் யூனிட் வாயிலாகவே இந்த திறனை எஞ்ஜின் வெளிப்படுத்துகின்றது. மேலும், இந்த கார் ஓர் நான்கு சக்கரங்களும் இயங்கும் திறன் பெற்ற காராகும்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த காரை ஓட்டிடணும்... அப்படி ஒரு அம்சத்தில் போர்ஷேவின் புதிய கார்! ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ!

போர்ஸ் பனமேரா 4 10 ஆண்டு பதிப்பானது 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 5.5 வினாடிகளிலேயே எட்டிவிடும். அதே நேரத்தில் இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 262 கிமீ ஆகும். இத்தகைய திறன் பெற்ற காரையே பனமேராவின் 10 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக போர்ஷே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche Panamera 4 10-Year Edition First Look Review: Celebrates A Decade Of The Luxury Sport Saloon. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X