போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

போர்ஷ நிறுவனத்தின் அதிசெயல்திறன்மிக்க சொகுசு செடான் கார் மாடலாக பனமெராக விற்பனையில் இருந்து வருகிறது. இதன் தனித்துவமான ஸ்டைல் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்சின் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், போர்ஷே பனமெரா 4 கார் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட போர்ஷே பனமெரா மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. போர்ஷே பனமெரா 4 காரில் 10 இயர்ஸ் எடிசன் (10 Years Edition) என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் புதிய டிசைனிலான 21 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற கதவுகளில் பனமெரா 10 என்ற சிறப்பு பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. டோர் சில் கார்டுகள், டேஷ்போர்டு ஆகிய இடங்களிலும் பனமெரா 10 என்ற வாசகத்துடன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

காருக்குள் தங்க வண்ணத்திலான தையல் வேலைப்பாடுகளும் கவரும் வகையிலும், தனித்துவத்தையும் வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் கஸ்மடைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் மாடலில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், போர்ஷே டைனமிக் லைட் சிஸ்டம், லேன் சேஞ்ச் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா, பனோரமிக் சன்ரூஃப், போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் என பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் ஆக்டிவ் ஏர் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கிறது. சாலை நிலைகளுக்கு தக்கவாறு இந்த காரின் சஸ்பென்ஷன் காரின் டேம்பர்களை தொடர்ந்து அட்ஜெஸ்ட் மிக சொகுசான பயணத்தை உறுதி செய்யும்.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பனமெரா 4 காரின் 10 இயர்ஸ் எடிசன் மாடலில் 2.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 226 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 10 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.

போர்ஷே பனமெரா 4 காரின் ஸ்பெஷல் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் 12 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும், 7 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். போர்ஷே பனமெரா கார்கள் ரூ.1.49 கோடி முதல் ரூ.2.57 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. தற்போது வந்துள்ள ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.1.60 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
German sport car manufacturer, Porsche, has just launched a celebratory edition of its Panamera. Dubbed the Panamera 4 10 Years Edition, and priced at Rs 1.60 crore ex-showroom, the model has been launched in the country to celebrate the model's tenth year of production.
Story first published: Monday, June 15, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X