புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் விதமாக, விலை மற்றும் முக்கிய விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் மாடலானது மூனறு விதமான பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் மாடலானது 4 கதவுகளுடன் கூடிய ஸ்டான்டர்டு வேரியண்ட், ஸ்போர்ட் டூரிஷ்மோ மற்றும் பின் இருக்கைக்கு கூடுதல் இடவசதி கொண்ட எக்ஸிகியூட்டிவ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் மாடலானது 5,049 மிமீ நீளமும், 1,937 மிமீ அகலமும், 1,427 உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,950 மிமீ ஆக உள்ளது.

MOST READ: மினி லம்போர்கினி அவென்டேடார் காராக மாறிய ஹார்லி டேவிட்சன் பைக்... சப்புகொட்ட வைக்கும் கவர்ச்சி!

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

இதில், ஸ்போர்ட் டூரிஷ்மோ மாடலின் உயரம் 1,432 மிமீ ஆக உள்ளது. அதாவது, ஸ்டான்டர்டு மாடலைவிட சற்றே அதிகம். எக்ஸிகியூட்டிவ் வேரியண்ட் 5,199 மிமீ நீளமும், வீல் பேஸ் நீளம் 3,100 மிமீ ஆகவும் உள்ளது. இது நீளம் மற்றும் வீல் பேஸ் நீளத்தில் அதிகம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் காரின் ஸ்போர்ட் டூரிஷ்மோ மாடலில் 520 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும், இதர இரண்டு வேரியண்ட்டுகளிலும் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளது. பின் இருக்கையை மடக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

MOST READ: இந்திய சாலைகளில் பட்டை கிளப்ப வரும் 2 புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார்கள்... அறிமுக தேதி விபரம்!

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

இந்த காரின் மூன்று வேரியண்ட்டுகளிலுமே பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாருடன் கூடிய ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 542 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

இதன் மின் மோடடார் 134 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 676 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

MOST READ: எஸ்-க்ளாஸ் மாடலின் தோற்றத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்...

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் மூலமாக இதன் செயல்திறன் மிகச்சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 310 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் இந்த காருக்கு வழங்கப்படுகிறது. விசேஷ வண்ணத் தேர்வுகளையும் வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

MOST READ: புதியதாக இரு நிறத்தேர்வுகளை பெற்ற எம்வி அகுஸ்டா சூப்பர்வேலோஸ்...

புதிய போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் இந்தியாவில் வெளியீடு!

போர்ஷே பனமெரா டர்போ எஸ் இ ஹைப்ரிட் கார் மாடலின் ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.2.44 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும், ஸ்போர்ட் டூரிஷ்மோ வேரியண்ட்டிற்கு ரூ.2.49 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும், எக்ஸிகியூட்டிவ் வேரியண்ட்டிற்கு ரூ.2.57 கோடி எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsche has listed the Panamera Turbo S E-Hybrid on its official Indian website and prices starting at Rs.2.44 Crore (Ex-Showroom).
Story first published: Saturday, May 16, 2020, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X