ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக 2021 போர்ஷே பனமேரா காரின் டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

2021 போர்ஷே பனமேரா, தனித்துவமான லக்சரி கார் என்ற அடையாளத்தால் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. நார்ட்ஸ்லீஃப் சுற்றில் 20.6 கிமீ மற்றும் 20.83 கிமீ நீட்சிகளில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 காரை 2020 போர்ஷே கார் தோற்கடித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், 7:29:81 என்ற லேப் சாதனையை புதிய தலைமுறை பனமேரா கார் புரிந்துள்ளது. இந்த 2020 மாடலின் உலகளாவிய அறிமுகம் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

மற்றப்படி காரை பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்கு எங்களுக்கும் தெரியாவிட்டாலும், இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டிருப்பய்து பனமேராவின் டாப் டர்போ எஸ் வேரியண்ட் ஆகும்.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

அதேநேரம் இதில் உள்ள ஸ்போர்ட் பக்கெட் இருக்கைகள் மற்றும் ரோல் கேஜ்-ஐ விற்பனை காரில் எதிர்பார்க்க முடியாது. 911 வரிசை கார்களை போன்று பனமேரா முற்றிலுமான ஸ்போர்ட்ஸ் கார் கிடையாது.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

ஏனெனில் இந்த காரில் பயணங்களின் சவுகரியம் முக்கிய விஷயமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. புதிய பனமேரா டர்போ எஸ் மாடலில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 4.0 லிட்டர், இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 616 பிஎச்பி பவரையும், 832 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தோற்றத்தை பொறுத்தவரை முன்புறத்தில் ஏர்டேம்-ஐயு,ம், பின்புறத்தில் குவாட் எக்ஸாஸ்ட்ஸையும் பார்க்காத வரை கார் உங்களுக்கு டைக்கானாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம்.

ட்ராக்கில் சீறும் 2021 போர்ஷே பனமேரா டர்போ எஸ் கார்... புதிய டீசர் வீடியோ வெளியானது...

தற்கால மாடர்ன் போர்ஷேக்களை போன்று புதிய பனமேராவும் அகலமான ட்ராக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020 பனமேராவில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், புதிய போர்ஷே தகவல்தொடர்பு நிர்வாகம் மற்றும் போர்ஷே ஆக்டிவ் மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
2021 Porsche Panamera Teased Ahead Of Global Debut
Story first published: Thursday, August 20, 2020, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X