போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் மாடலான டைகான் இந்திய சந்தையில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகமாகவுள்ளதை கடந்த வாரம் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா கூட்டணி நிறுவனங்களின் முதல் மீடியா நைட் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது போர்ஷே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் ஷெட்டி உறுதி செய்துள்ளார்.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

போர்ஷே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் முதன்முதலாக உலக சந்தையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

இந்த எலக்ட்ரிக் செடான் கார், 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் இருந்து பார்வைக்காக வைக்கப்பட்ட மிஷன் இ கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த காரில் போர்ஷே நிறுவனத்தின் இவி பிரிவு நிபுணர்களின் வழிக்காட்டுதலின்படி அதிகளவில் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

ஹை-வோல்டேஜ் லித்தியம்-இரும்பு பேட்டரிகளை கொண்ட அகற்றமுடியாத இரு ஒத்தியங்கு எலக்ட்ரிக் மோடார்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 600பிஎச்பி பவர் வரையில் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்ட இந்த எலக்ட்ரிக் மோட்டார் சிங்கிள் சார்ஜில் சுமார் 500கிமீ தூரம் வரை காரை இயக்கும் திறன் கொண்டவை.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய வேகமாக சார்ஜ் செய்யும் ஆற்றல் கொண்ட 800-வோல்ட் சார்ஜர்கள் வழங்கப்படவுள்ளன. 400கிமீ தூரம் வரை காரை இயக்க இந்த சார்ஜர் மூலம் வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமானது. இந்த எலக்ட்ரிக் செடான் கார் 0-லிருந்து 100 kmph என்ற வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும்.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

க்வாட்-எல்இடி ஹெட்லைட்களை பெற்றுள்ள இந்த செடான் மாடலின் முன்புறத்தில் நேர்த்தியான பொனேட் மற்றும் தடிமனான பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் முன்புற பகுதியை விட உயரமாகவும் நேர்த்தியாகவும் மெல்லியதான எல்இடி டெயில்-லேம்ப்பையும் கொண்டுள்ளது.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

எதிர்வரும் காற்றை மிக எளிதாக ஏமாற்றிவிட்டு முன்னேறி செல்லும் வகையில் காரின் வெளிப்புற பேனல்களின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், 0.22 என்ற குறைவான இழுவை குணகத்தை போர்ஷே நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடல் கொண்டுள்ளது. இதனால் தொலைத்தூர பயணங்களிலும் எலக்ட்ரிக் மோட்டாரின் குறைவான எனர்ஜியை தான் இந்த செடான் கார் பயன்படுத்தும்.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

தற்சமயம் சில வெளிநாட்டு சந்தைகளில் டர்போ மற்றும் டர்போ எஸ் என்ற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் காரில் 93.4-kWh மற்றும் 79.2 kWh என்ற ஆற்றல்கள் கொண்ட இரு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

இதன் டாப் வேரியண்ட்டான டர்போ எஸ் மாடல் அதிகப்பட்சமாக 750 பிஎச்பி பவர் வரையில் இயங்கும் திறனை பெற்றுள்ளது. இதனால் 96 kmph என்ற வேகத்தை இந்த வேரியண்ட் டைகான் மாடலின் டர்போ வேரியண்ட்டை காட்டிலும் 3 வினாடிகள் முன்னதாக 2.6 வினாடிகளில் அடைந்துவிடுகிறது.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

4-வீல் ட்ரைவ் ஸ்டேரிங்கை கொண்ட இந்த எலக்ட்ரிக் மாடலுக்கு உலக சந்தையில் மிக பெரிய போட்டி மாடலாக டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் உள்ளது. டெஸ்லா மாடல் எஸ் ஆனது அதிக ஆற்றல் மதிப்பீட்டை பெற்றிருந்தாலும் போர்ஷே டைகான் எலக்ட்ரிக் மாடலை விட மிக சிறிய அளவிலேயே தொழிற்நுட்பங்களின் தரத்தில் மேம்பட்டுள்ளது.

போர்ஷேவின் முதல் எலக்ட்ரிக் செடான் மாடலான டைகான் இந்தியாவிற்கு எப்போது வரும்..?

ஏனெனில் டைகான் மாடல் ஏகப்பட்ட ப்ராடிக்கல் பேக்கேஜ்களை கொண்டுள்ளது. அமெரிக்க சந்தையில் இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 7.6 லட்சத்தை ஆரம்ப விலையாக பெற்றுள்ளது. இதன் டாப் வேரியண்ட் டர்போ எஸ் மாடல் ரூ.1 கோடியே 72 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
Porsches the first fully electric sedan model Taycan will come to India by end of 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X