கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.34 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையை பெற்றுள்ள கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் இந்தியா முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் பெங்களூரை சேர்ந்த டீலர்ஷிப் ஒன்று 10 கார்னிவல் கார்களை ஒரே நாளில் டெலிவிரி செய்து அசத்தியுள்ளது.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

கியா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் கார்னிவல் எம்பிவி மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வந்தது. 10 கார்னிவல் மாடல்களை ஒரே நாளில் டெலிவிரி செய்த கியாவின் பெங்களூர் டீலர்ஷிப்பின் பெயர் M/S PPS கியா ஆகும்.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

பெங்களூரில் மைசூர் ரோடில் அமைந்துள்ள இந்த டீலர்ஷிப்பில் இருந்து 10 கியா கார்னிவல் கார்கள் டெலிவிரி செய்ததை குறித்து கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குனரும் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரியுமான மனோகர் பாட் கருத்து தெரிவிக்கையில், கியா ப்ராண்டிற்கு இந்திய மார்க்கெட்டில் இருந்து கிடைக்கும் ஆதரவை கண்டு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

ராஜிவ் சங்வீ என்பவரின் தலைமையில் இயங்கிவரும் பிபிஎஸ் நிறுவனத்துடனான எங்களது கூட்டணி தான் கியா மோட்டார்ஸை சந்தையில் இந்த அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக அமைந்தது. கார்னிவல் போன்ற எம்பிவிகளுக்கு இந்தியாவில் சிறப்பான மார்க்கெட் இருப்பதால், இதற்கு முன் இல்லாத அளவிற்கு ஆடம்பர தோற்றத்தை சக்தி வாய்ந்த என்ஜின் திறனுடன் இந்த எம்பிவி மாடலுக்கு வழங்கியுள்ளோம்.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

இந்தியா முழுவதும் 160 நகரங்களில் 265 மையங்கள் பரந்த நெட்வோர்க்கிற்காகவும், தடையற்ற சேவையை வழங்கும் விதமாகவும் எங்களது நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சந்தைக்கு தற்போது புதியதாக வந்து கார்னிவல் எம்பிவி இந்தியாவின் அனைத்து மூலை முடுக்கிற்கும் சென்றடைய முடியும் என கூறினார்.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட கியா கார்னவலுக்கு இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.24.95 லட்சம் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7,8 மற்றும் 9 என வெவ்வேறான இருக்கை தேர்வுகளுடன் இந்த மாடல் டீலர்ஷிப்களில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்ய முடியும்.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

ட்ரிம் தேர்வுகளை பொறுத்துவரை ப்ரீமியம், ப்ரீஸ்டீஜ் மற்றும் லிமௌசைன் என்ற 3 ட்ரிம் வேரியண்ட்களை கியா நிறுவனம் இந்த எம்பிவி மாடலுக்கு வழங்கியுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான லிமௌசைன் அதிகப்பட்சமாக ரூ.33.95 லட்சத்தில் சந்தையில் விலையை பெற்றுள்ளது.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

இந்த டாப் வேரியண்ட்டில் கூடுதலாக நப்பா லெதர் வடிவமைக்கப்பட்ட உட்புற கேபின், வயர்லெஸ் போன் சார்ஜிங், இரட்டை சன்ரூஃப், ஹர்மன் கர்டனின் சவுண்ட் சிஸ்டம், 3 நிலைகளில் கிளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கை பயணிகளுக்கும் சேர்த்து 10.1 இன்ச்சில் இரு தொடுத்திரைகள், தொடுதல் மூலம் இயங்கும் கதவுகள், கியாவின் யூவிஒ கனெக்டிவிட்டி ஷூட் உள்பட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

கார்னிவல் எம்பிவியில் இயக்கத்திற்கு 2.2 லிட்டர் CRDi என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 202 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கார்னிவல் எம்பிவியை ஆந்திராவில் உள்ள தனது சொந்த தொழிற்சாலையில் தயாரித்து வருகிறது. மேலும் இந்த தொழிற்சாலையில் இருந்து தான் இன்னும் சில ஆண்டுகளுக்கு கியா நிறுவனத்தின் எதிர்கால இந்திய மாடல்கள் அனைத்தும் தயாரிக்கப்படவுள்ளன.

சூடுப்பிடிக்கும் கியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள்... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி

கார்னிவல் எம்பிவிக்கு இதுவரை 3,500 முன்பதிவுகள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் கியா நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்த புதிய மாடலின் முன்பதிவு எண்ணிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.

Most Read Articles
English summary
PPS KIA, MYSORE ROAD DELIVERS 10 CARNIVAL ON A SINGLE DAY
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X