டெஸ்லாவை விஞ்சும் அம்சங்களுடன் வரும் 'மேட் இன் இந்தியா' எலெக்ட்ரிக் சூப்பர் கார்!

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை விஞ்சும் சிறப்பம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் குறித்து வெளியாகி இருக்கும் சில முக்கியத் தொழில்நுட்பத் தகவல்கள் வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை மிக வலுவான நிலையை நோக்கி நகரத் துவங்கி இருக்கிறது. இதனால், எதிர்காலத்தில் இந்த சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், பல வாகன உற்பத்தி நிறுவனங்களும், புதிய நிறுவனங்களும் களமிறங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

கடந்த ஆண்டு வரை விலை குறைவான மின்சார வாகனங்களுக்கான சந்தையாக கருதப்பட்ட இந்தியா தற்போது சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கான வாகன சந்தையாகவும் மாறத் துவங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கு செயலாற்றி வருகின்றன.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

ஆனால், இந்திய நிறுவனம் ஒன்று சத்தமில்லாமல் ஒரு சூப்பரான சொகுசு எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கிறது. ஆம். பெங்களூரை சேர்ந்த பிரவெயிக் என்ற நிறுவனம் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 என்ற எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி இருக்கிறது.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

விற்பனைக்கு உகந்த அம்சங்களுடன் இந்த காரை மேம்படுத்துவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த மின்சார காரின் முக்கிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

புதிய பிரவெயிக் எக்ஸ்டிங்ஷன் எம்கே1 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 504 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 201.5 பிஎச்பி பவரையும், 2400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என்றும் பிரவெயிக் தெரித்துள்ளது.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் கடந்து விடும். மணிக்கு 196 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டதாகவும் இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக பேட்டரியை 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

பொதுவாக சொகுசு, ரேஞ்ச் மற்றும் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள்தான் உலக அளவில் பிரபலமாக உள்ளன. அதற்கு இணையான செயல்திறன், சொகுசு அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

முன்புறத்தில் வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள், இரண்டு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் மெல்லிய விளக்கு பட்டை தனித்துவமாக உள்ளது. தாழ்வான கூரை அமைப்பும் இதனை தனித்துவப்படுத்துகிறது. அதேபோன்று, கவரும் வகையில் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் மிக விசேஷமான இருக்கை அமைப்பும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 அசத்தும் அம்சங்களுடன் வரும் பிரவெயிக் எலெக்ட்ரிக் கார்!

வரும் தீபாவளி பண்டிகையின்போது இந்த கார் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், இது தனிநபர் வாடிக்கையாளர்களைவிட கார்ப்பரேட் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கான விருந்தினர் பயன்பாட்டு சந்தையை குறிவைத்து களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Bangalore-based electric vehicle start-up, Pravaig Dynamics, has revealed the specs of Extinction MK1 electric-car. The company has recently begun the testing phase for the electric car and is expected to launch sometime next year.
Story first published: Friday, August 21, 2020, 11:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X