Just In
- 3 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 7 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க! வருகிறது புதிய விதி... இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..!
விரைவில் புதிய நடைமுறை ஒன்று வாகனம் சார்ந்து அமலுக்கு வரவிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் போக்குவரத்து மற்றும் வாகனம் சார்ந்த விதிகள் அண்மைக் காலங்களாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன. விதிமீறல்களே இல்லாத நாட்டை உருவாக்கும் வகையில் உச்சபட்ச அபராதம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாசில்லா நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரக்கட்டுப்பாடு விதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனால், சிறிய ரக டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறின. இந்த நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் ஓர் புதிய விதி சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விதி பழைய வாகனங்கள் மற்றும் அதிக மாசினை ஏற்படுத்தும் வாகனங்களின் பயன்பாட்டை ஒழிக்க இருக்கின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கக்கூடிய வாகனங்கள் பியூசி தரச்சான்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. பியூசி தர சான்று என்பது வாகனத்தில் இருந்து வெளியேறும் புகைகுறித்து செய்யக்கூடிய ஆய்வாகும். இது, குறிப்பிட்ட அந்த வாகனம் காற்றை எந்தளவு மாசுபடுத்துகின்றது என்பதைத் தெளிவுப்படுத்த உதவும்.

எனவேதான், பியூசி தரச் சான்றை வாகனங்களுக்கு வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. அதாவது, இந்த புதிய விதி வருகின்ற 2021 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றது. மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சமீப காலமாகவே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மின் வாகன ஊக்குவிப்பு மற்றும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே பியூசி சான்று கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. விரைவில், பியூசி சான்று ஆன்லைன் நிலைக்கு மாற்றப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, ஒரு பியூசி சான்று பெற்ற பின்னர் அதற்கான காலவதி நாள் வழங்கப்பட இருக்கின்றது.

ஆகையால், வாகன உரிமையாளர்கள் தொடர்ச்சியாக பியூசி சான்று எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட இருக்கின்றனர். பியூசி சான்று பெறாமல் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பதிவு சான்று (Registration Certificate) பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசும் - அளவிடும் முறையும்:
வாகனத்தின் புகையை பரிசோதிக்கும்போது பூஜ்ஜியத்தில் இருந்து 50 என்ற தரசான்று கிடைத்தால் அது மிக சிறந்த வாகனமாக கருதப்படும். 51 முதல் 100 வரை பெறும் எனில் அது திருப்திகரமானவையாக எடுத்துக் கொள்ளப்படும். 101 முதல் 200 வரை பெறுமானால் அந்த வாகனம் காற்றை மிதமாகவே மாசுபடுத்துகின்றது என்று அர்த்தம். 201 முதல் 300 வரை அளவு இருப்பின் அது மோசமானதாக கருதப்படுகின்றது.

அதுவே, 301 முதல் 400 வரை இருப்பின், அது மிக மோசமானது. 401 முதல் 500 வரை மிக மிக மோசமானது. இயக்கத்திற்கு சற்றும் உகந்த வாகனம் இல்லை என்பதற்கான அர்த்தமே இந்த குறியீடு. இம்மாதிரியான வாகனங்கள் கண்டறியப்பட்டு அவை வெளியேற்றப்படும். இம்மாதிரியான நடவடிக்கை மூலம் காற்று மாசுபாட்டில் இருந்து இந்த நாட்டையும், பூமியையும் காக்க முடியும் என நம்பப்படுகின்றது.