70கிமீ வேகத்தில் தறிகெட்டு ஓடிய லாரி! 40கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்! சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

தமிழ் திரைப்படங்களையே மிஞ்சுகின்ற வகையில் நிஜ வாழ்க்கையில் சேஸிங் சீன் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் காணலாம்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

நாட்டின் உயிர் நாடியாக போக்குவரத்துத் துறை இருக்கின்றது. இதில், அதிகம் பங்கு கொள்ளும் வாகனங்களாக சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் லாரிகள் மற்றும் டிரக்குகள் இருக்கின்றன. இவற்றின் இயக்கம் மிக முக்கியமானவை என்பதனால்தான் கடந்த காலங்களில் கொரோனா வைரசால் நாடு முழுவதும் முழு பொது முடக்கம் நீடித்திருந்தபோதிலும் லாரி மற்றும் டிரக்குகளின் இயக்கத்திற்கு மட்டும் தடையில்லா அனுமதி வழங்கப்பட்டது.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

குறிப்பாக, இவை ஏற்றிச் செல்லும் பெரும்பாலான பொருட்கள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. எனவேதான் இந்த சிறப்பு சலுகை சரக்கு வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காகதான் சரக்கு வாகனங்களின் போக்குவரத்திற்கு எப்போதுமே தடை விதிக்கப்படுவதில்லை.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு சில சரக்கு வாகன ஓட்டிகள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களைக் களையெடுக்கும் விதமாகவே போக்குவரத்து போலீஸார் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநிலங்களின் எல்லைகளில் தடுப்புகளை அமைத்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

குறிப்பாக, இந்த ஆய்வில் வாகனம் உரிய ஆவணங்களை வைத்திருக்கின்றதா, ஏற்றிச் செல்லும் பொருள் வரி மற்றும் விதிகளுக்கு உட்பட்டதா, என்பதைப் போன்ற முக்கியமான விபரங்கள் கேட்டறியப்படுகின்றது. அதேசமயம், சில நேரங்களில் இந்த இடங்களில்தான் போலீஸார் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஞ்சம், மாமூல் போன்றவற்றைக் கேட்டு லாரி டிரைவர்களை போலீஸார்கள் நிர்பந்திப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

எனவேதான், போலீஸார் தடுத்து நிறுத்தினாலும் சில சரக்கு வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பித்து விடுகின்றனர். அந்தமாதிரியான ஓர் சம்பவமே தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம்குறித்த வீடியோவே தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

சுமார் 40 கிமீ விடாமல் விரட்டிச் சென்று அந்த டிரக் டிரைவரை போலீஸார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கைதாகியிருக்கும் அந்த டிரைவரின் பெயர் முகேஷ் குமார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, வேறொரு டிரக்கை முகேஷ் குமார் மோதியிருக்கின்றார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே பாதிப்பிற்குள்ளான டிரைவர் போலீஸை செல்போன் வாயிலாக அழைத்துள்ளார்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

காவலர்கள் வருவதை உணர்ந்த முகேஷ் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். ஓட்டுநரின் இந்த செயல் காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை எழுப்பியது. டிரக்கில் தடைச் செய்யப்பட்ட அல்லது சட்டத்திற்கு புறம்பான பொருள் கடத்தப்படலாம் என யூகிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே போலீஸார் அந்த டிரக்கை நிறுத்தி முயற்சித்தனர்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

ஆனால், முகேஷ் குமார் விடாமல் டிரக்கை அதிவேகமாக இயக்க ஆரம்பித்தார். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில்கூட லாரியை அவர் அதிக வேகத்தில் பறக்கவிட்டார். சுமார் 70 கிமீ வேகத்திற்கும் அதிகமாக அந்த லாரி தரிகெட்டு ஓடியதாக கூறப்படுகின்றது. இருப்பினும் கார்களில் விடாமல் விரட்டிய போலீஸார், வழி நெடுக தடைகளை ஏற்படுத்தினர்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

பெரிய லாரி டயர் மற்றும் கற்கள் போட்டும் அந்த டிரைவர் சலைக்காமல் லாரியை இயக்க ஆரம்பித்தார். இதனால், லாரியின் இரு வீல்கள் நொறுங்கின. இருப்பினும், சுமார் 40 கிமீ தூரம் வரை போலீஸாருக்கு அவர் தண்ணி காட்டினார். இதன்பின்னரே மிகப்பெரிய தடுப்புகள் அமைத்து அந்த லாரி நிறுத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என ராஜஸ்தான் மாநில செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், தற்போது வரை லாரியில் என்ன பொருள் இருக்கின்றது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதில், நிச்சயம் தடை செய்யப்பட்ட பொருள் இருக்கலாம் என அம்மாநில அரசு அதிகாரிகள் சிலர் யூகித்துள்ளனர். இச்சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், முகேஷ் குமாரை சிறை பிடித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

70 கிமீ வேகத்தில் தரிகெட்டு ஓடிய லாரி! 40 கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்... சிங்கம் படத்தை மிஞ்சிய சீன்! வீடியோ!

தறிகெட்டு ஓடிய லாரியால் குறிப்பிட்ட அந்த சாலை புழுதி படலமாக மாறியது. மேலும், சாலையில் நின்றுக் கொண்டிருந்தோர் மத்தியில் பெரிதும் அச்சத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது. சினிமா ஷூட்டிங்தான் எடுக்கப்படுகின்றதோ என்றெல்லாம் மக்களை அது யோசிக்க வைத்தது. ஏன், வீடியோவை பார்த்த நம்மால்கூட இந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை. லாரி ஓட்டுநர் முகேஷ் குமாரின் இந்த செயல் பலருக்கு மிகவும் மோசமான அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் இதில் நேரவில்லை என்பது நல்ல செய்தியாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rajasthan Police Arrested Truck Driver After 40 KM Chase. Read In Tamil.
Story first published: Friday, September 25, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X