ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

கியா செல்டோஸ் கார் இந்தியாவில் பிரம்மாண்ட வெற்றியை சந்தித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

தென் கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா மோட்டார், இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கியா வேகமாக பிரபலமாகி இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் கியா நிறுவனம் அறிமுகம் செய்த முதல் தயாரிப்பு செல்டோஸ். இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும்.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

கியா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தன்னை நங்கூரமிட்டு நிலை நிறுத்தி கொள்வதற்கு செல்டோஸ் கார் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. தற்போது இந்திய சாலைகளில் செல்டோஸ் காரை மிக எளிதாக காண முடிகிறது. கியா செல்டோஸ் எஸ்யூவி கார் விற்பனையில் அந்த அளவிற்கு சக்கை போடு போட்டு கொண்டுள்ளது.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

செல்டோஸ் எஸ்யூவி ஆறு மாதங்களை நிறைவு செய்தபோது, கியா நிறுவனம் இந்தியாவில் தங்களது அடுத்த தயாரிப்பான கார்னிவல் காரை களமிறக்கியது. இது லக்ஸரி எம்பிவி ரக கார் ஆகும். கியா கார்னிவல் காரும் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் 10 கார்களில் ஒரு கார் கியா நிறுவனத்துடையது.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்ப கூடியவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதனால் இந்தியாவில் இயங்கி வரும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகின்றன. எஸ்யூவி செக்மெண்ட்டில் கார்களின் விற்பனை மிக சிறப்பாகவே இருக்கும்.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

கியா நிறுவனம் இதனை மனதில் வைத்து ஹோம் ஒர்க் செய்திருக்கலாம். இதன்பின் இறுதியாக செல்டோஸ் எஸ்யூவி காரை தங்களது முதல் தயாரிப்பாக விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கலாம். இதற்கு அடுத்தபடியாக கியா நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டாவது கார் கார்னிவல். இது எம்பிவி ரகத்தை சேர்ந்தது.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் தற்போது எம்பிவி செக்மெண்ட்டும் வெகு வேகமாக பிரபலமாகி வருகிறது. வெவ்வேறு வடிவம் மற்றும் அளவுகளை கொண்ட கார்களுடன் பல நிறுவனங்கள் இந்த செக்மெண்ட்டிற்குள் நுழைந்து கொண்டுள்ளன. தற்போது நமது மார்க்கெட்டில் ஒரு பக்கம் விலை குறைவான ட்ரைபர் காரும், மறுபக்கம் விலை அதிகமான மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரும் இருக்கின்றன.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகின்றன. அதற்குள்ளாக 81,716 செல்டோஸ் கார்களை விற்பனை செய்து கியா நிறுவனம் அசத்தியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை. அதுவும் கியா நிறுவனம் இந்தியாவிற்கு புதிய பிராண்டு எனும்போது, இது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

அதே சமயம் வெறும் இரண்டே மாதங்களில், 3,187 கியா கார்னிவல் எம்பிவி கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் மிக பிரம்மாண்டமான வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் அதன் விலையை கியா நிறுவனம் சவாலாக நிர்ணயம் செய்தது முக்கிய காரணம்.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

கொடுக்கும் பணத்திற்கு வொர்த் ஆன மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. இதுதவிர 18 வேரியண்ட்களில் கியா செல்டோஸ் கிடைக்கிறது. அதாவது அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில் வேரியண்ட்கள் இருக்கின்றன. ஒரு டீசல் மற்றும் இரண்டு பெட்ரோல் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் கார் கிடைக்கிறது.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

இந்த 3 இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இது தவிர அட்டகாசமான டிசைனும், அமர்க்களமான வசதிகளும் கியா செல்டோஸ் இந்திய மார்க்கெட்டில் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்தியாவின் சூழல் அவ்வளவு சிறப்பாக இல்லை.

ரோட்ல எங்க பாத்தாலும் கியா செல்டோஸ்... பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்...

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து இந்தியா மீண்ட பிறகு, செல்டோஸ் மீண்டும் விற்பனையில் கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Reasons Behind Kia Seltos SUV's Success. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X