புதிய கார்களுக்கு 18சதவீத ஜிஎஸ்டி வரி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

ரெனால்ட் நிறுவனம் அதன் புதிய சலுகை பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

பிரபல ஃபிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், அண்மையில் இந்தியா வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வருடத்தின் முடிவை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த புதிய அறிவிப்பின்படி ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 70 ஆயிரம் வரையிலான பலன்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

இந்த சிறப்பு சலுகை அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது மீண்டுமொரு தரமான அறிவிப்பை ரெனால்ட் வெளியிட்டிருக்கின்றது. புதிய வாகனங்களின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை விலக்கு செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

ரெனால்ட் நிறுவனத்தின் இந்த சிறப்பு சலுகை மாற்றுதிறனாளி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆமாங்க, மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் விதமாக 18 சதவீத ஜிஎஸ்டி வரி குறைப்பை வழங்க இருப்பதாக ரெனால்ட் அறிவித்துள்ளது.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

கார்பரேட் தள்ளுபடி திட்டத்தின்கீழ் இந்த திட்டத்தை ரெனால்ட் அறிவித்துள்ளது. நிதி மற்றும் கனரக கைத்தொழில் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி 18 சதவீத ஜிஎஸ்டி வரி சலுகையை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகை 1,200 சிசி திறன் கொண்ட சப்-4 மீட்டர் பெட்ரோல் எஞ்ஜினுடைய கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகின்றது.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

புதிய வாகனத்தைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர், குறிப்பிட்ட ஆவணத்தைச் சமர்பிக்க வேண்டும். இதன்பின்னரே தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என ரெனால்ட் தெரிவித்துள்ளது.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

இதுகுறித்து ரெனால்ட் நிறுவனத்தின், விற்பனை மற்றும் நெட்வொர்க் பிரிவிற்கான இந்திய தலைவர் சுதிர் மல்ஹோத்ரா கூறியதாவது, "மாற்று திறனாளிகள், நம் சமூகத்தின் சிறப்பு திறன் கொண்ட முக்கியமான உறுப்பினர்கள் ஆவார்கள். இவர்கள் ரெனால்ட்டின் தயாரிப்புகளை இன்னும் எளிதில் அணுகக்கூடிய வகையில் ஜிஎஸ்டி தள்ளுபடி மற்றும் கூடுதல் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன" என்றார்.

புதிய கார்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி குறைப்பு... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ரெனால்ட்... ஆனா இது எல்லாருக்கும் கிடையாது!

சிறப்பு ஜிஎஸ்டி தள்ளுபடியின்கீழ், அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளரால் ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Announce Spcial Offer For Differently-Abled Customers. Read In Tamil.
Story first published: Friday, December 4, 2020, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X