Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தன்னலமற்ற சேவை.. புற்றுநோயாளிகளுக்காக வாழ்நாளையே அர்பணித்தவர் மருத்துவர் சாந்தா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுதந்திர தின ஸ்பெஷல்: ரெனோ கார்களுக்கு ரூ.80,000 வரை சேமிப்புச் சலுகைகள்!
ரெனோ கார்களுக்கு ரூ.80,000 வரை சேமிப்புச் சலுகைகள் மற்றும் சிறப்பு கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்காக கடந்த ஜூன் மாதத்திலிருந்து பல்வேறு சலுகைகளையும், கடன் திட்டங்களையும் ரெனோ கார் நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், பண்டிகை காலம் துவங்கும் இந்த தருணத்தில் சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

குறைவான மாதத் தவணை கொண்ட கடன் திட்டங்கள், லாயல்டி போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சேமிப்புச் சலுகைகள், தள்ளுபடியுடன் இந்த திட்டங்கள் வந்துள்ளன. ரெனோ க்விட், டஸ்ட்டர், ட்ரைபர் கார்களுக்கு இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

ரெனோ க்விட்
ரெனோ க்விட் காருக்கு ரூ.35,000 வரை நேரடி தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது கேரளா, குஜராஜ் மற்றும் மஹாராஷ்டிராவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ரூ.40,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். மேலும், ரூ.7,000 கார்ப்பரேட் சேமிப்புச் சலுகையையும் க்விட் காருக்கு ரெனோ வழங்குகிறது. கேரளாவை சேர்ந்த வாடிக்கையாளர்களக்கு ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையிலும், கூடுதலாக 5 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டமும் வழங்கப்படும்.

தவிரவும், Buy Now, Pay In 2021 என்ற சிறப்பு கடன் திட்டமும் க்விட் காருக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதல் நான்கு மாதங்களுக்கு மிகக் குறைவான மாதத் தவணையை செலுத்தும் வகையில் இந்த கடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் சாதாரண மாதத் தவணையை செலுத்தலாம். அதாவது, பொருளாதார நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முதல் நான்கு மாதங்கள் அதிக மாதத் தவணை சுமை இருக்காது. க்விட் காருக்கு 6.99 சதவீத வட்டியில் சிறப்பு கடன் திட்டமும் உள்ளது.

ரெனோ ட்ரைபர்
ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், கார்ப்பரேட் போன்ஸ் மற்றும் லாயல்டி போன்ஸாக ரூ.10,000 மதிப்புடைய ஆக்சஸெரீகளை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. க்விட் கார் போன்ற முதல் நான்கு மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை செலுத்தும் கடன் திட்டமும், 6.99 சதவீத வட்டியில் கடனுதவியும் வழங்கப்படும்.

ரெனோ டஸ்ட்டர்
ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.80,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ஆஃபர் திட்டத்தின் கீழ் ரூ.20,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் திட்டத்தின் கீழ் ரூ.25,000 வரையிலும் பெற முடியும். லாயல்டி போனஸாக ரூ.20,000 வரை பெற முடியும் என்று ரெனோ தெரிவித்துள்ளது.

பண்டிகை கால ஸ்பெஷல்
பண்டிகை காலத்தில் கார் வாங்குவதற்காக முன்பதிவு செய்ய இருப்பவர்களுக்கு ரெனோ நிறுவனத்தின் இந்த சிறப்புச் சலுகைகள் மற்றும் கடன் திட்டங்கள் கவரும் வகையில் இருக்கும். இந்த ஆஃபர்கள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். எனவே, இந்த ஆஃபர்கள் குறித்து அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ரெனோ டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.