Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வருஷம் முடிய போகுது... சலுகைகளை வாரி வழங்கும் ரெனால்ட்... என்னனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய கட்டுவீங்க!
ரெனால்ட் நிறுவனம் ஆண்டு முடிவை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

நடப்பு 2020 வருடம் முடியவடைய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்தநிலையில் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ரெனால்ட் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ஆண்டு இறுதி தள்ளுபடி மற்றும் சலுகையின்மூலம் ரூ. 70 ஆயிரம் வரையிலான பலன்களை புதிய வாடிக்கையாளர்களால் அனுபவிக்க முடியும்.

புதுமுக வாகனங்களான டஸ்டர், டிரைபர் மற்றும் க்விட் ஆகிய கார்களுக்கும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குறைவான இஎம்ஐ மற்றும் எளிய நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பை நிறைய சலுகைகளை இந்த நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது என்றுகூட கூறலாம்.

சரி வாருங்கள் முதலில் ரெனால்ட் க்விட் காருக்கான சலுகைகளைப் பற்றி பார்க்கலாம். இக்காருக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான கூடுதல் சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்துடன், 20 ஆயிரம் ரூபாய் சிறப்பு ரொக்க தள்ளுபடியும் வழங்கப்பட இருக்கின்றது. கூடுதல் சில சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 9,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. இதேபோன்று, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் விவசாயியிகளுக்கும் ரூ. 5000 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது.

இவையனைத்தைக் காட்டிலும் சிறப்பு சலுகையாக 0 சதவீத வட்டி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமாங்க, 1.3 லட்சத்தை கடனாக பெற்று, 12 மாத இஎம்ஐ திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கயாளர்களுக்கு பூஜ்ஜியம் வட்டி விகிதத்தில் கார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த சலுகை ரெனால்டின் டிரைபர் மற்றும் டஸ்டர் கார்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது.

ரெனால்ட் டிரைபருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிற சலுகைகள்; இந்த எம்பிவி காருக்கு ரூ. 50 வரையிலான சிறப்பு பலன்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, ரூ. 20 வரை கேஷ் டிஸ்கவுண்ட், ரூ. 10 ஆயிரம் வரையில் லாயல்டி பலன் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த காரை ரூ. 2.31 லட்சம் கடனில், 12 மாத இஎம்ஐ திட்டத்தில் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பூஜ்ஜியன் வட்டி விகிதத்தில் கார் வழங்கப்பட இருக்கின்றது.

டஸ்டர் காருக்கான சிறப்பு பலனாக ரூ. 50 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் டர்போ மாடலுக்கு இது ரூ. 70 ஆயிரம் வரை வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், சிறப்பு எக்ஸ்சேஞ்ஜ் சலுகை மற்றும் ரொக்க நன்மைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.