தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்6 கேப்சர் மாடலின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரெனால்ட்டின் இந்த புதிய பிஎஸ்6 மாடல் கொரோனா வைரஸ் பரவலினால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபின் அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ரெனால்ட் கேப்சர் காரின் தற்போதை பிஎஸ்4 வெர்சனில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் தற்போதைக்கு பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவற்றின் பிஎஸ்4 மாடல்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படவுள்ளது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

இதன் பிஎஸ்4 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

MOST READ: வெளியே வரவே அச்சப்படும் மக்கள்! விலையுயர்ந்த காரில் கெத்தாக வந்திறங்கிய பிரபல நடிகர்.. ஏன் தெரியுமா?

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

இந்த பெட்ரோல் என்ஜின் 13.87 மைலேஜ் அளவையும், டீசல் என்ஜின் 20.37 மைலேஜ்ஜையும் காருக்கு வழங்குகிறது. தற்போதைய கேப்சர் மாடல் பெட்ரோல் என்ஜினில் இரு வேரியண்ட்களிலும், டீசல் என்ஜினில் இரு வேரியண்ட்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

இவற்றின் ஆரம்ப விலை ரூ.9.5 லட்சமாகவும், அதிகப்பட்ச விலை ரூ.12 லட்சமாகவும் எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்யூல்-டோன் நிறத்தேர்வுகளிலும் கிடைக்கும் கேப்சர் மாடலுக்கு மொத்தம் 29 விதமான பெயிண்ட் தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் வழங்கி வருகிறது.

MOST READ: அம்பானி பயன்படுத்தும் விலையுயர்ந்த 3 ரோல்ஸ் ராய்ஸ்... ஒவ்வொன்னும் எத்தனை கோடி தெரியுமா..?

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

டைமண்ட் கட் அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த எஸ்யூவி ரக கார், எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், 7-இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது. இதில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்க முடியும்.

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ரெனால்ட் நிறுவனம் இந்த காரின் கேபினில் அப்ஹோலஸ்டரி இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், பல கட்டுப்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த காரில் இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சீட் பெல்ட்கள், ஐசோபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை உள்ளன.

MOST READ: 2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

இந்நிறுவனம் கேப்சர் மாடலின் முன்புறத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து இந்த எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

தயாரிப்பு பணியில் பிஎஸ்6 ரெனால்ட் கேப்சர்... மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம்...

ரெனால்ட் நிறுவனம் கேப்சர் எஸ்யூவி காருடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற டஸ்டர், க்விட் மற்றும் ட்ரைபர் மாடல்களையும் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்துள்ளது. கேப்சர் மாடலுக்கு சந்தையில் போட்டி மாடல்களாக மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்டவை உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Captur BS6 in the works. India launch likely soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X