ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

இந்தியாவுக்காக ரெனோ நிறுவனம் உருவாக்கிய க்விட், ட்ரைபர் கார்கள் அமோக வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில், அடுத்து இந்தியாவுக்காக புதிய காம்பேக்ட் எஸ்யூவியையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

தற்போது சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் HBC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், கிகெர் என்ற பெயரை ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

இந்த புதிய கிகெர் பெயரானது எச்பிசி காம்பேக்ட் எஸ்யூவிக்கு சூட்டப்பட இருப்பதாக தெரிகிறது. க்விட், ட்ரைபர் கார்கள் உருவாக்கப்பட்ட ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

ஆனால், ட்ரைபர் கார் 7 சீட்டர் மாடலாக வந்த நிலையில், புதிய எச்பிசி காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலானது 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

புதிய கிகெர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

க்விட், ட்ரைபர் கார்களை போன்றே, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படும்.

ரெனோ காம்பேக்ட் எஸ்யூவியின் பெயர் விபரம் கசிந்தது!

ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இந்த ரெனோ கிகெர் கார் விலை குறைவான தேர்வாக நிலைநிறுத்தப்படும்.

Via - Carwale

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has filed a trademark application for the name 'Kiger' and it will be used for all new compact SUV model.
Story first published: Thursday, January 2, 2020, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X