ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டு வருகிறது. டஸ்ட்டர், க்விட், ட்ரைபர் கார்கள் மூலமாக இந்தியர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை பெற்றுவிட்ட உற்சாகத்தில் அடுத்து எலெக்ட்ரிக் கார் சந்தையின் மீது கண் வைத்துள்ளது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

இதன்படி, இந்திய சந்தைக்கான சரியான எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, க்விட் கார் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் வரும் என்பது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தனது ஸோயி எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது ரெனோ. அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸோயி எலெக்ட்ரிக் கார் மாடலை காட்சிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் ரெனோ ஸோயி கார் 4,087 மிமீ நீளமும், 1,787 மிமீ அகலமும், 1,562 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,588 மிமீ ஆக உள்ளது. இந்த கார் டாடா அல்ட்ராஸ், மாருதி பலேனோ போன்ற கார்களுக்கு இணையான பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்திலான மாடலாக இருக்கும். ஆனால், மின்சார மாடல் என்பது இதன் முக்கிய அம்சமாக கூறலாம்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் காரில் 52kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஒரு மின் மோட்டார் (R110) மற்றும் இரண்டு மோட்டார்கள் (R135) கொண்ட மாடல்களிலும் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கிறது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

இந்தியாவில் ஒரு மின் மோட்டார் கொண்ட மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. இந்த மாடலானது 108 பிஎஸ் பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலானது 135 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் காரின் ஒரு மின் மோட்டார் கொண்ட மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். இரண்டு மின் மோட்டார்கள் கொண்ட மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

அதேபோன்று, R110 மாடலானது மணிக்கு 135 கிமீ வேகம் வரையிலும், R135 மாடலானது மணிக்கு 140 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருக்கிறது. பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றினால் 1 மணிநேரம் 10 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

இந்த காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

இந்த காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 9.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் சார்ஜர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்திய அறிமுகம் உறுதியானது!

புதிய ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு விலை அடிப்படையில் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French car maker, Renault has confirmed that the company will launch Zoe EV in India sometime soon.
Story first published: Friday, January 31, 2020, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X