ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது 'பவர்ஃபுல்' ரெனோ டஸ்ட்டர்!

பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

எஸ்யூவி கார் வாங்க திட்டமிடும் இந்தியர்களுக்கு தோதான பட்ஜெட், சிறப்பம்சங்கள், போதிய செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளை காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்கள் வழங்குகின்றன. இதனால், இந்த மார்க்கெட் இப்போது கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

இதில், 4 மீட்டருக்கும் சற்றே நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்கள் வந்தவுடன் இந்த மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுவிட்டது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

இந்த மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வந்த ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட மாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த சூழலில், இந்த ரகத்தில் முதலாவதாக இந்தியாவில் விற்பனைக்கு வந்த டஸ்ட்டர் எஸ்யூவி சந்தைப் போட்டியால் கடும் சிரமப்பட்டு வருகிறது. எனவே, இதன் மதிப்பை கூட்டுவதற்கான முயற்சியில் ரெனோ கார் நிறுவனம் இறங்கி இருக்கிறது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

அதன்படி, போட்டியாளர்களைவிட ஒரு படி மேலே போகும் வகையில் டஸ்ட்டர் எஸ்யூவியில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்க உள்ளது. அண்மையில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியில் வழங்கப்பட்ட அந்த டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் ரெனோ டஸ்ட்டரிலும் வர இருக்கிறது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

ரெனோ டஸ்ட்டரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார் அண்ட் பைக் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

இந்த புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

இதன்மூலமாக, இந்த ரகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தேர்வாக ரெனோ டஸ்ட்டர் மாறும். அதாவது, மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கே சவால் தரும் வகையில் இதன் செயல்திறன் அமைய உள்ளது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஓரங்கட்டேய்... விரைவில் வருகிறது பவர்ஃபுல் ரெனோ டஸ்ட்டர்!

எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி விளக்குகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றிருக்கும். ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is planning to launch Duster with 1.3 turbo petrol engine option by August this year.
Story first published: Monday, July 20, 2020, 19:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X