ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... டீசல் மாடலுக்கு 'கல்தா'!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பிஎஸ்=6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வரும் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, பிஎஸ்-6 எஞ்சினுடன் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில், தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடலானது பெட்ரோல் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். பின்னர் சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை ரெனோ டஸ்ட்டரில் வழங்கப்பட்டு வந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு விலக்கப்பட்டு விட்டது. டீசல் எஞ்சின் இரு விதமான பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் கிடைத்து வந்தது. இந்த 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பையும், நம்பகத்தன்மையையும் பெற்றிருந்தது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால், அதனை மேம்படுத்துவதற்கான செலவும், விற்பனையும் எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதால், விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறிது ஏமாற்றமான விஷயம்தான்.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மாடலானது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடல் வந்தால், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும்.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இந்த புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை ரெனோ நிறுவனம் நிஸான் மற்றும் டெய்ம்லர் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது.

 ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ரெனோ டஸ்ட்டர் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலுக்கு ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எஸ், ஆர்எக்ஸ்இசட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பிஎஸ்-4 மாடலைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் பிஎஸ்6 மாடல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ரினால்ட் #renault
English summary
French carmaker, Renault has launched the Duster with BS6 petrol engine model in India price starting from Rs 8.49 lakhs (ex-showroom Delhi).
Story first published: Tuesday, March 17, 2020, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X