ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

2012ஆம் ஆண்டிற்கு பிறகு ரெனால்ட் நிறுவனம் புதிய டஸ்டர் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முரட்டுத்தனமான, ஸ்டைலிஷான தோற்றத்துடன் வழங்கப்படும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் அனைத்து விதமான சாலைகளிலும் சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்குகிறது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

டஸ்டர் டீசல் 4X4 அமைப்புடன் வழங்கப்பட்டது. ஆனால் டஸ்டரின் இந்த டீசல் வேரியண்ட் இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுவிட்டது. இருப்பினும் 2012ல் இருந்து நிறைய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்களை இந்த ரெனால்ட் கார் பெற்று வந்துள்ளதால், தற்போது இதன் தோற்றம் உண்மையில் அட்டகாசமாகவும், கம்பீரமாகவும் உள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் ரெனால்ட் நிறுவனம் முற்றிலும் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை டஸ்டரில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த வகையில் டஸ்டர் டர்போ என அழைக்கப்படும் இதன் லேட்டஸ்ட் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் டஸ்டர் டர்போ காரை நகர்புற சாலைகளில் மற்றும் நெடுஞ்சாலைகளில் கடந்த சில நாட்களாக இயக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்த டர்போ காரை பற்றி தெரிந்த கொண்ட விஷயங்களை இனி பார்ப்போம்.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

டிசைன் & ஸ்டைல்

தோற்றத்தை பொறுத்தவரையில் காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் புதிய டஸ்டர் டர்போ கார் அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதன் காஸ்பியன் நீல நிற பெயிண்ட் நம் கண்களை கவர்ந்திழுக்கிறது. காரின் முன்பக்கத்தில் க்ரில் அமைப்பை சுற்றிலும் குறிப்பிடத்தக்க அளவில் க்ரோம் வழங்கப்பட்டுள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

டர்போ கார் என்பதை வெளிகாட்டும் விதமாக நீல நிற காரை சுற்றிலும் சிவப்பு நிற உள்ளீடுகளை பார்க்க முடிகிறது. இந்த வகையில் சிவப்பு நிற ஹைலைட்டை க்ரில்லின் ஒரு க்ரோம் ஸ்லாட்டும், மேற்புறத்தில் மூடுபனி விளக்குகளும் பெற்றுள்ளன. ஹெட்லைட் யூனிட்டும் சில க்ரோம்களை பெற்றுள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ரெனால்ட் நிறுவனத்தின் முத்திரையின் உட்புறத்திலும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் அமைப்பில் குறைவான ஒளி பிரகாசத்திற்காக ப்ரோஜெக்டர் அமைப்பும், அதிக ஒளிக்காக ஒளி பிரதிபலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டிலும் ஹாலோஜன் பல்புகள் உள்ளன.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இந்த டர்போ வெர்சனில் டிஆர்எல்கள் மிகவும் அழகாக இரு துண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் மொத்த காரின் நிறத்திற்கு ஏற்ற விதத்தில் பம்பரின் கீழ்பகுதியில் க்ரே நிறம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியே பக்கவாட்டு பகுதி சென்றால், 17 இன்ச்சில் இரட்டை நிறத்தில் உள்ள 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் நம்மை வசீகரிக்கின்றன.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ஒருங்கிணைக்கப்பட்ட இண்டிகேட்டர்கள் உடன் பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. டஸ்டர் டர்போ காரின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 205மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளது. கரடுமுரடான ஆஃப்-ரோடு சாலைகளுக்கும் இந்த க்ரவுண்ட் கிளியரென்ஸ் போதுமானதே.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

பின்புறத்தில் செங்குத்தான வடிவில் டெயில்லைட்களை டர்போ டஸ்டர் கார் பெற்றுள்ளது. இந்த டெயில்லைட் அமைப்பின் மத்தியில் எல்இடி ஸ்ட்ரிப்பும், மற்ற பல்புகள் ஹலோஜன் தரத்திலும் வழங்கப்பட்டுள்ளன. பின் கதவின் மத்தியில், முன்பு க்ரோம் அல்லது கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு வந்த ரெனால்ட் நிறுவனத்தின் முத்திரை இந்த டர்போ காரில் சிவப்பு நிறத்தில் உள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இருப்பினும் டர்போ முத்திரை க்ரோம் நிறத்திலேயே தொடரப்பட்டுள்ளது. மேற்கூரை சங்கி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரையில் பளிச்சிடும் காஸ்பியன் நீல நிற பெயிண்ட் அமைப்பில் சுற்றிலும் சிவப்பு மற்றும் க்ரே நிற உள்ளீடுகளை வழங்கி இருப்பதன் மூலம் இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பில் ரெனால்ட் நிறுவனம் அதிக கவனத்துடன் செயல்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

உட்புறம் & வசதிகள்

காரின் கதவை திறந்து உள்ளே நுழைந்தால், முதலாவதாக கேபினில் வழங்கப்பட்டுள்ள அதிக இட வசதி நம்மை வரவேற்கின்றன. இருப்பினும் வெளிப்புறத்தை போல் உட்புறமும் மிகவும் ஆரம்ப நிலையிலேயே காட்சியளிக்கிறது. அதேபோல் வெளிப்புறத்தில் பார்க்க முடிந்த சிவப்பு நிற ஹைலைட்களை உட்புறத்திலும் காண முடிகிறது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

கேபின் முழுவதும் வலிமையான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டிருப்பினும், கதவு பேனல்களில் சில மென்மையான பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கலவை நமக்கு சிறிது மாடிஃபை காரின் உணர்வை தருகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் கருப்பு நிற கேபின் உடன் டர்போ கார் நல்ல காம்பினேஷனே.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இருக்கை அமைப்பில், முன்புறத்தில் இரு இருக்கைகளும் நன்கு சவுகரியமான இட வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இருக்கைகள் தொலைத்தூர பயணங்களின்போது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாவிடினும், சவுகரியத்தில் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இந்த இருக்கை அமைப்பில் உள்ள கால்கள் மற்றும் பக்கவாட்டு போல்ஸ்டர்கள் பயணத்தின்போது ஓரளவுக்கு உதவியாக உள்ளன. இரண்டாவது இருக்கை வரிசையில் தாராளமாக மூன்று நபர்கள் அமரலாம். ஆனால் இரண்டு பேர் அமர்ந்தால்தான் ஆர்ம்ரெஸ்ட்டை பெற முடியும். டஸ்டரின் டாப் ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டில் மட்டும் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

லெதரால் மூடப்பட்டுள்ள ஸ்டேரிங் சக்கரம் கூடுதல் க்ரிப்-ஐ வழங்குகிறது. இந்த ஸ்டேரிங் சக்கரத்தில் சில பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றிற்கும் எம்ஐடி திரை அல்லது இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. க்ளஸ்ட்டர் இந்த டஸ்டர் டர்போவில் மிகவும் ஆரம்ப தரத்தில் ஸ்பீடோ மீட்டர் மற்றும் ஓடோமீட்டருக்கான அனலாக் டயல்கள் வசதியை கொண்டுள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இதன் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையின் மூலம் பயண குறிப்புகள், எரிபொருளின் அளவு, ஃப்யூல் கேஜ் உள்ளிட்டவற்றை அறிய முடியும். இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது ஒளி பிரதிபலிக்காத 7-இன்ச் தொடுதிரையுடன் வழங்கப்பட்டுள்ளது. மைய கன்சோலிற்கு சற்று கீழே இந்த திரை வழங்கப்பட்டுள்ளதால், காரை இயக்கி கொண்டே இந்த திரையை பயன்படுத்த முடியும்.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இதன் இன்ஃபொடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் வசதியை கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு கீழே ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் உள்ளது. இது காரை நீங்கள் நிறுத்த முற்படும்போது காரின் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிடும்.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

மீண்டும் ப்ரேக் பெடலை அழுத்தினால் மட்டுமே மீண்டும் காருக்கு இது உயிர் கொடுக்கும். இந்த ஆட்டோமேட்டிக் அமைப்பு நிச்சயம் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் எரிபொருளை மிச்சப்படுத்த உதவும். ஆனால் ஏசி-ஐயும் இந்த சிஸ்டம் நிறுத்திவிடுவதால் கோடை காலங்களில் இது எரிச்சலை உண்டாக்கும். அந்த மாதிரியான சமயங்களில் இந்த வசதியை ரத்து செய்துவிடுவதே சிறந்தது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இயக்க ஆற்றல் & ஹேண்ட்லிங்

ஏற்கனவே கூறியதுபோல், டஸ்டர் டர்போவில் முற்றிலும் புதிய 1.3 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 156 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த டர்போ என்ஜினில் நிஸான் ஜிடி-ஆரில் உள்ள அதே சிலிண்டர் கோட்டிங் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

மேலும் இந்த என்ஜின் சிறப்பான செயல்திறனிற்காக இரட்டை மாறி வால்வு நேரத்தையும் கொண்டுள்ளது. இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை ஆக்ஸலேரேஷன் உண்மையில் அட்டகாசமாக உள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் கிட்டத்தட்ட 1,700 ஆர்பிஎம்-ல் இருந்து 1,800 ஆர்பிஎம்-விற்கு உள்ளாக வெளிப்படும் டர்போ தான் உங்களது முகத்தில் மெல்லிய சிரிப்பை வர வைக்கும். கியரை மாற்றுவது மென்மையாக உள்ளது. கியர்பாக்ஸ் குறிப்பாக நகர்புற சாலைகளில் சிறப்பாக செயல்படுகிறது. மேனுவல் மோடில் காரை இயக்கினால் கியர் ஷிஃப்ட்டின்போது சில கண்ட்ரோல்கள் கிடைக்கின்றன.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

மேனுவல் மோடில் கார் இல்லையென்றால் கியர் தானாக 5500 ஆர்பிஎம்-ல் மாற்றம் அடைந்து கொள்ளும். ஆனால் உண்மையில் ஆட்டோமேட்டிக் மோடை காட்டிலும் மேனுவல் மோடில்தான் கியர் ஷிஃப்ட் ஆகுவதை தெளிவாக உணர முடிகிறது. ஆட்டோமேட்டிக் மோடில் உங்களால் மற்ற வாகனங்களை முந்தி செல்ல முடியும்.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் விரைவாக முந்தி செல்ல வேண்டுமென்றால் மேனுவல் மோடில்தான் அது எளிமையானதாக இருக்கும். இத்தகைய சிறப்புகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்பீடு லிமிட்டையும் டஸ்டர் டர்போ கார் கொண்டுள்ளது. பயணம் மற்றும் ஹேண்ட்லிங் மட்டுமின்றி சஸ்பென்ஷனும் டஸ்டரின் இந்த புதிய டர்போ வேரியண்ட்டில் சிறப்பாக உள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இதனால் சாலைகளில் பள்ளங்களை பார்த்தால் காரின் வேகத்தை குறைத்தால் மட்டுமே போதும். சஸ்பென்ஷன் தானாக தனது வேலையை பார்க்கும். காரின் காப்பு மற்றும் என்விஎச் நிலைகள் மிக நன்றாக உள்ளதால், என்ஜின் சத்தமோ அல்லது வெளிப்புறம் சத்தமோ உட்புற கேபினுக்கு வருவதில்லை. வளைவுகளில் திருப்பும்போதும் கார் சிறப்பாக செயல்படுகிறது. காரின் இயக்க திசையை மாற்றுவது சற்று கடினமானதாக உள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ஆனால் இது இயக்கத்தின்போது பெரிய பிரச்சனையாக இல்லாவிடினும், கார் நின்றுபோகும்போது தலைவலியை உண்டாக்குகிறது. மேலும் முழு யு-டர்னிற்கு முழு பலத்தையும் உபயோகப்படுத்த வேண்டியதாக இருந்தது. மற்றப்படி இந்த டர்போ காரின் மைலேஜ்ஜை நாங்கள் கண்காணிக்கவில்லை. டஸ்டர் டர்போ கார் 16-ல் இருந்து 17kmpl மைலேஜ்ஜை வழங்கும் என ரெனால்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

இந்த மைலேஜை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்விலும் பெற முடியும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸில் மென்மையான பயணத்தை கார் வழங்கியதை நாங்கள் கவனித்தோம். ஆக்ரோஷமான பயணத்தை விருப்புவீர்கள் என்றால் உங்களுக்கு மேனுவல் மோட் சரியானதாக இருக்கும்.

ஹேண்ட்லிங் எதிர்பார்க்கும் அளவில் உள்ளதா..? ரெனால்ட் டஸ்டர் டர்போ காரின் முழு விமர்சனம் இதோ...

ரெனால்ட் டஸ்டர் டர்போ ஆர்எக்ஸ்இசட் வேரியண்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.13.56 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் உள்ள மற்ற கார்கள் கொண்டிருக்கும் வசதிகள் பலவற்றை பெறாத நிலையில் டஸ்டர் டர்போ காரின் இந்த விலை சற்று அதிகமே. ஆனால் சிறப்பான ஹேண்ட்லிங் மற்றும் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் இந்த குறையை பெரிதாக காட்டாது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Duster Turbo Review (First Drive): The Best Handling Mid-Size SUV?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X