விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் டஸ்டர் மாடலை விரைவில் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நிஸான் கிக்ஸ் 1.3 லிட்டர் மாடலுடன் அதன் பிரிவில் சக்திவாய்ந்த எஸ்யூவியாக விளங்கவுள்ள இந்த காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதிய மாசு உமிழ்வு விதி நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்ததினால் இந்திய சந்தை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 தரத்திற்கு தங்களது டீசல் மாடல்களை அப்டேட் செய்து வருவது செலவு மிகுந்த பணியாக உள்ளதால் பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மாடல்களில் டீசல் வேரியண்ட்டை வழங்குவதை நிறுத்தியுள்ளன.

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

இந்த வகையில் ரெனால்ட் நிறுவனமும் டஸ்டர் மாடலின் பிரபலமான 1.5 லிட்டர் டீசல் என்ஜினின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது. இதனால் ஏற்படவுள்ள நஷ்டத்தினை ஈடுக்கட்டும் விதமாக இந்நிறுவனம் டஸ்டர் மாடலில் புதிய 1.3 லிட்டர் எச்ஆர்13 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வை வழங்க முடிவு செய்துள்ளது.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் டஸ்டர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ரெனால்ட் நிறுவனம் தற்சமயம் டஸ்டர் எஸ்யூவி காரை 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கி வருகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 106 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

புதியதாக வழங்கப்படவுள்ள 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் தேர்வு இந்த எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்படவுள்ளது. எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் தற்போதைய பெட்ரோல் என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் தான் விற்பனையை தொடரவுள்ளன.

MOST READ: ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

நிஸானின் கிக்ஸ் மாடலின் மூலம் சமீபத்தில் சந்தையில் அறிமுகமான எச்ஆர்13 டர்போசார்ஜ்டு என்ஜின் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 156 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் டஸ்டரில் மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி ஆட்டோ தேர்வு உடன் வழங்கப்படவுள்ளது.

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட டஸ்டரின் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்தது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டஸ்டரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

MOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க...

விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....

அதாவது இதன் முன்புற க்ரில், ஃபாக் லேம்ப் ஹௌசிங் மற்றும் பின்புறத்தில் டஸ்டர் முத்திரையில் சிவப்பு நிறம் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. இவற்றுடன் 17-இன்ச்சில் ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்களையும் இந்த கார் பெற்றிருந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் விரைவில் அறிமுகமாகவுள்ள 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டஸ்டர் மாடலில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Duster turbo launch soon in india.
Story first published: Sunday, May 24, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X