இந்தியாவின் பவர்ஃபுல் காம்பேக்ட் எஸ்யூவியாக மாறுகிறது ரெனோ டஸ்ட்டர்!

சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ரெனோ டஸ்ட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த காம்பேக்ட் எஸ்யூவியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி குறித்த முழுமையானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்திய காம்பேக்ட் எஸ்யூவியில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ டஸ்ட்டர் ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆளுமையான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள், மிக சரியான பட்ஜெட் ஆகியவை இந்த காருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த நிலையில், சந்தைப் போட்டி மிகுதியால் தற்போது ரெனோ டஸ்ட்டர் மார்க்கெட் இந்தியாவில் சுருங்கி போய்விட்டது. இதற்கு எழுச்சி கொடுக்கும் விதத்தில், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்க ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த மாடலின் வருகையை இந்தியர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில், ஆட்டோ எக்ஸ்போவில் புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த எஞ்சினுடன் எக்ஸ்-ட்ரோனிக் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் விற்பனைக்கு வரும்பட்சத்தில், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக ரெனோ டஸ்ட்டர் பெருமை பெறும்.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் முன்புற ரேடியேட்டர் க்ரில் அமைப்பில் சிவப்பு வண்ண அலங்காரத்துடன் தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பம்பர், பின்புற கதவுகளில் டர்போ என்பதை குறிக்கும் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் இந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கியா செல்டோஸ் ஜிடி லைன் மற்றும் விரைவில் வரும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Renault has showcased Duster turbo petrol model at ongoing Auto Show.
Story first published: Thursday, February 6, 2020, 21:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X