இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

இக்கட்டான இந்த தருணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சில மகிழ்வான அறிவிப்புகளையும், கார் பராமரிப்பு உபாயங்களையும் ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

கொரோனா பிரச்னையால் ஒட்டுமொத்த உலகமே பொருளாதாரத்தில் இருள் சூழ்ந்த நிலையில் இருக்கிறது. அனைத்து தரப்பிலும் பொருளாதார பிரச்னைகள் பூதாகரமாக வெடிக்கத் துவங்கி இருக்கின்றன. ஆட்டோமொபைல் துறையும் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை கார், பைக் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

இந்த வரிசையில், ரெனோ இந்தியா கார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி, சர்வீஸ் குறித்த சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

MOST READ: சூப்பர்... கொரோனா வீசிய பந்தை சிக்சருக்கு விளாசும் மத்திய அரசு... தரமான சம்பவத்தை செய்ய ரெடி ஆகிறது

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

அதன்படி,தேசிய ஊரடங்கு காலத்தில் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் போன்றவை காலாவதியானால் கூட அதனை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதற்கான கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர அவசர உதவி சேவையையும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

MOST READ: ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

மேலும், கார் பராமரிப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு சில உபாயங்களையும் குறுந்தகவல் மூலமாக அனுப்பி இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது காரை ரன்னிங் கன்டிஷனில் வைத்துக் கொள்ள உதவும்.

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

இதுதவிர்த்து, டீலர்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து புதிய கார் வாங்கும் வாய்ப்பை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது. 'Book Online, Pay Later' என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

MOST READ: பஜாஜ்-கேடிஎம் கூட்டணியில் உருவாகவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்...

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

மை ரெனோ மொபைல் செயலி அல்லது ரெனோ இணையதளம் மூலமாக புதிய ரெனோ கார்களை வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ய முடியும். இதில், முன்பணம் எதுவும் இல்லாமலேயே கார் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை அருகாமையிலுள்ள டீலரை சேர்ந்த விற்பனை பிரதிநிதி தொடர்பு கொண்டு அனைத்து நடைமுறைகளையும் செய்து கொடுப்பார். இமெயில் அல்லது வாட்ஸ் அப் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து விபரங்கள், சந்தேகங்களையும் அந்த விற்பனை பிரதிநிதி நிவர்த்தி செய்வார். தேவைப்பட்டால், வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்து அனைத்து வித உதவிகளையும் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: புதிய ஹோண்டா சிட்டி டாப் வேரியண்ட்டில் அசத்தும் வசதிகள்!

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

இதுதவிர்த்து, ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் டீலர்களில் வர்த்தகம் முடங்கி போயுள்ளது. இதனால், மிகப்பெரிய இழப்புகளை டீலர்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு பொருளாதார அளவில் சில உதவிகளையும் ரெனோ கார் நிறுவனம் வழங்க உள்ளது. இருப்பில் கார்களுக்கான தொகையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் உள்ளிட்ட உதவிகளை ரெனோ வழங்க இருக்கிறது.

இக்கட்டான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்வை கொடுத்த ரெனோ!

மேலும், டீலர்களில் உள்ள விற்பனை பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சியையும் வழங்க இருப்பதாக ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலமாக வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
The world has been struck hard by the COVID-19 pandemic due to which the auto industry along with all the other businesses are facing a lot of difficulties. A lot of dealerships are on the verge of closing permanently, but many manufacturers are trying hard to help them.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X