ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் குறைந்தபட்சம் ஒரு தயாரிப்பையாவது வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றன. இதனால் இந்த செக்மெண்ட்டில் சமீப காலமாக போட்டி அனல் பறந்து வருகிறது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்கள், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

இதுதவிர நிஸான் மேக்னைட் காரும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த சூழலில், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியை அதிகரிக்கும் வகையில், ரெனால்ட் ஹெச்பிசி (Renault HBC) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் புதிய காரின் கான்செப்ட் மாடல் நாளை (நவம்பர் 18) வெளியிடப்படவுள்ளது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

ஆனால் இது கான்செப்ட் மாடலாக மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தயாரிப்பு நிலை மாடலாக இருக்காது என கூறப்படுகிறது. ரெனால்ட் ஹெச்பிசி மிக நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார் ஆகும். இது ரெனால்ட் கிகர் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

முதலில் இந்த காரை நடப்பு ஆண்டே விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக அதன் அறிமுகம் தள்ளிப்போனது. அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

அத்துடன் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் உடன் ரெனால்ட் கிகர் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

ஆனால் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தால் உறுதி செய்யப்படாத விஷயங்களை பற்றிதான் நாம் இங்கே பேசி கொண்டுள்ளோம். இதில், காரின் அதிகாரப்பூர்வ பெயரும் அடங்கும். ஆம், கிகர் என்பதுதான் இதன் பெயர் என்பதை ரெனால்ட் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்த காருக்கு ரெனால்ட் கிகர் என்ற பெயர் சூட்டப்படலாம் என்று பரவலாக அனைவராலும் நம்பப்படுகிறது.

ரெனால்ட் கிகர் காம்பேக்ட் எஸ்யூவி கான்செப்ட் நாளை வெளியிடப்படுகிறது... எகிறும் எதிர்பார்ப்பு...

ரெனால்ட் நிறுவனம் உறுதி செய்யாத வரை, ஹெச்பிசி என்ற குறியீட்டு பெயரிலேயே இந்த காம்பேக்ட் எஸ்யூவி அழைக்கப்படும். எனினும் இந்த கார் தொடர்பாக ஒரு சில அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளை நமக்கு கிடைக்கலாம். இந்த புதிய கார் குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்வதற்கு, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kiger Compact SUV Concept To Be Unveiled Tomorrow - All Details You Need To Know. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X