ரெனோ கிகர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

ரெனோ கிகர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், முதல்முறையாக இன்டீரியர் அமைப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

பட்ஜெட் விலையில் புதிய எஸ்யூவி மாடலை ரெனோ கார் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ரெனோ எச்பிசி என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவி மாடல் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கொண்டு வரப்பட உள்ளது. ஆனால், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மிக குறைவான விலை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்பதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

இந்த நிலையில், பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் உள்ள புதிய ரெனோ கிகர் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இதுதொடர்பான ஸ்பை படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியாகி இருப்பதுடன், முதல்முறையாக இன்டீரியர் அமைப்பை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

ரெனோ ட்ரைபர் 7 சீட்டர் மினி எம்பிவி காரின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், இன்டீரியர் சற்றே வித்தியாசமாக டிசை செய்யப்பட்டு வருகிறது. சில விஷயங்கள் ஒன்றாக இருந்தாலும், பல தனித்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 8 அங்குலத்தில் ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதற்கு கீழாக ஏசி வென்ட்டுகள், அதற்கு கீழாக புஷ் பட்டன் உள்ளிட்ட கட்டுப்பாட்டு சுவிட்சுகள் உள்ளன.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

அடர்ந்த கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருப்பதால், இது ட்ரைபர் காரை விட பிரிமீயமாக இருக்கிறது. அதேநேரத்தில், ட்ரைபர் காரின் அதே ஸ்டீயரிங் வீல் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சிம் கார்டு மூலமாக இணைய வசதியுடன் கூடிய கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெறுவதற்கு உதவும்.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

புதிய ரெனோ கிகர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்படும். மற்றொரு 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். இன்னும் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

ரெனோ க்விட் காரில் இருப்பது போன்றே புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், V வடிவிலான க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரின் வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ஸ்பை படங்களில் இது சற்றே பெரிய க்விட் கார் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால், எஸ்யூவிக்கு உரிய தனித்துவங்களுடன் டிசைன் செய்யப்பட்டு வர இருக்கிறது.

ரெனோ கிகெர் எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்... இன்டீரியரை காணும் வாய்ப்பு!

வரும் அக்டோபர் மாதத்தில் புதிய ரெனோ கிகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். ஆனால், போட்டியாளர்களைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French auto manufacturer, Renault is gearing up to launch a new compact-SUV in the Indian market. It is internally named as 'HBC' and could be called as the 'Kiger' when launched. The SUV is expected to be launched sometime in October this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X