Just In
- 6 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 8 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 9 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 9 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெனோ கிகர் எஸ்யூவியின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது!
ரெனோ கிகர் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், அதன் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக வர்த்தக வளம் மிக்க சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடலை இறக்குவதற்கு நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளது. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் கிகர் என்ற புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலை விரைவில் களமிறக்க உள்ளது.

பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய கிகர் எஸ்யூவி இதுவரை கான்செப்ட் மாடலாகவும், ஸ்பை படங்களின் மூலமாகவும் மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதனை கார் பிரியர்களுக்கும், புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி வாங்க காத்திருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் டீசர் ஒன்றை ரெனோ இன்று வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த மாடல் வர இருப்பதையும் ரெனோ உறுதிப்படுத்தி உள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான் புதிய ரெனோ கிகர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு எஸ்யூவியும் தோற்றத்திலும், சில முக்கிய அம்சங்களில் மட்டுமே வேறுபடும்.

ரெனோ க்விட் உள்ளிட்ட கார்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த புதிய எஸ்யூவியிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. வி வடிவிலான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், மூன்று அறை அமைப்புடைய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், முப்பரிமாண டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், ரியர் ஸ்பாய்லர் இதன் முக்கிய டிசைன் அம்சங்களாக இருக்கும்.

புதிய ரெனோ கிகர் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களிலும் சிறந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள்தான் இந்த புதிய மாடலிலும் வழங்கப்படும். இந்த காரில் இடம்பெற இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இதன் மற்றொரு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும் என தெரிகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

புதிய ரெனோ கிகர் எஸ்யூவி ரூ.6 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் மேக்னைட் எஸ்யூவியுடன் போட்டி போடும். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் ஆகிய மாடல்களுக்கும் இது போட்டியாக அமையும்.