ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

ரெனால்ட் நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான கிகர் சப்-4-மீட்டர் க்ராஸ்ஓவர் மாடல் கடந்த சில வாரங்களுக்கு தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த கார் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இதுகுறித்த ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருப்பினும் பக்கவாட்டு பகுதியின் தோற்றம் நமது கண்களுக்கு தெரிய வருகிறது. முன்னதாக இந்த காரின் உட்புற கேபின் கொண்டுள்ள அம்சங்களை வெளிக்காட்டும் விதத்தில் சில சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இவற்றின் மூலமாக இந்த 2020 மாடல் அதன் பிரிவில் நிலவும் விற்பனை போட்டியை சமாளிக்கும் விதமாக ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. இதில் 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், காரின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாட்டிற்காக புஷ்-பொத்தான், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சில கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

ரெனால்ட்டின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த க்ராஸ்ஓவர் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ட்ரைபர் பிஎஸ்6 மினி-எம்பிவி காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாடல்களும் ஒரே விதமான என்ஜின் தேர்வை தான் பெற்றுள்ளன.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இருப்பினும் கிகர் மாடலின் டாப் வேரியண்ட்களுக்கு கூடுதலாக 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் 3-சிலிண்டர் என்ஜின் தேர்வு வழங்கப்படலாம். மேலும் இந்த என்ஜின் ட்ரைபர் எம்பிவி காருக்கு எதிர்காலத்தில் வழங்கப்படலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

அதேநேரம் தற்சமயம் வழங்கப்படுகின்ற பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 71 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது. 2020 கிகர் மாடலில் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஏஎம்டி மற்றும் சிவிடி என்ற மூன்று கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இருப்பினும் 6-ஸ்டெப் யூனிட்களாக கொடுக்கப்படவுள்ள சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு இதன் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. நிஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களின் கூட்டணியால் கிகர் மாடல் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் சந்தைப்படுத்தப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.

ரெனால்ட் கிகர் காரின் பக்கவாட்டு பகுதியை வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் தற்சமயம் இந்தியாவில் டஸ்டர், க்விட் மற்றும் சமீபத்திய அறிமுகமான ட்ரைபர் மாடல்களை மட்டும் தான் சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் விட கிகர் மாடல் மட்டுமே போட்டியினை அதிகமாக சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kiger side view detailed in latest spy shots – 2 SUVs testing together
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X