பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள ரெனால்ட் கிகர் கார் எறிவளைதடு (பூமராங்) வடிவிலான எல்இடி டிஆர்எல்களுடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் ட்ரைபர் மற்றும் க்விட் என்ற அதிகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களை சந்தையில் கொண்டுள்ளது. இந்த பிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரைபர் எண்ட்ரீ-லெவல் மாடுலர், நிறுவனத்தின் ஆண்டு இறுதி விற்பனையை அதிகரிக்கும் விதத்தில் இந்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

ஆனால் இந்த எண்ட்ரீ-லெவல் கார் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கான சூழல் தற்போது நாட்டில் இல்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 8,805 யூனிட்களின் விற்பனையை சந்தையில் ரெனால்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆனால் அதுவே கடந்த 2019 செப்டம்பரில் மொத்தம் 8,345 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இதிலிருந்து கொரோனா வைரஸ் சூழலிலும் விற்பனையில் 5.5 சதவீத முன்னேற்றத்தை கண்டுள்ளதை அறியலாம். 8,805 என்ற விற்பனை எண்ணிக்கை ட்ரைபர், க்விட் மற்றும் டஸ்டர் என்ற மூன்று கார் மாடல்களின் மூலம் ரெனால்ட் நிறுவனம் அடைந்த எண்ணிக்கையாகும். இவற்றில் ட்ரைபர், க்விட் என்ற இரு கார்களே 8,672 விற்பனை எண்ணிக்கையை இந்நிறுவனத்திற்கு பெற்று கொடுத்துள்ளன.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

இத்தகைய சூழலில் ரெனால்ட் நிறுவனம் நிஸான் உடன் இணைந்து மாடிஃபைடு சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் எச்பிசி என்ற குறியீட்டு பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கிகர் என்ற பெயரில் விற்பனையை துவங்கவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் அறிமுகம் முன்னதாக இந்த ஆண்டிற்குள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்றுமதி, இறக்குமதிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதால் இதன் அறிமுகம் அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு தள்ளிப்போகியுள்ளது.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

இதனால் இப்போதும் கிகரின் சோதனைகளையே இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் மேற்கொண்ட வண்ணம்தான் உள்ளது. இந்த வகையில் தற்போது காடிவாடி செய்திதளத்தின் கண்ணில் பட்டுள்ள சோதனை கிகர் மாதிரி ஒன்று சில பாகங்களை தவிர்த்து முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் பூமராங் வடிவிலான எல்இடி தரத்திலான பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய (டிஆர்எல்) விளக்குகள் நம்மால் பார்க்க முடிகிறது. முன்புறம் கொண்டுள்ள மெல்லிய செவ்வக வடிவிலான ஹெட்லேம்ப்பிற்கு, பின்பக்கத்தில் உள்ள இந்த எல்இடி டிஆர்எல்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

இவை மட்டுமின்றி ஸ்போர்டியான தோற்றத்திற்காக தாழ்வாக காற்று ஏற்பான், கருப்பு ப்ளாஸ்டிக் க்ளாடிங், ராக்டு விண்ட்ஷீல்டு, சறுக்கலான மேற்கூரை போன்றவற்றையும் இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. பின் கதவு, C-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப் மற்றும் தடிமனான பம்பர் உள்ளிட்டவை அனைத்தும் சேர்ந்து காரின் பின்பக்கத்திற்கு அகலமான தோற்றத்தை வழங்குகின்றன.

பூமராங் வடிவிலான எல்இடி விளக்குகளுடன் விற்பனைக்குவரும் ரெனால்ட் கிகர்... ஸ்பை படங்கள் வெளியானது...

கிகர் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்கள் 16 இன்ச் அலாய் சக்கரத்தில் இயங்கவுள்ளன. இயக்க ஆற்றலுக்கு 5-ஸ்பீடு மேனுவல், சிவிடி ஆட்டோமேட்டிக் என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிட்டத்தட்ட 95 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் எச்ஆர்10 டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இந்த காரில் வழங்கப்படலாம்.

கிகரின் எக்ஸ்ஷோரூம் விலையை ரூ.5.50 லட்சத்தில் ரெனால்ட் நிறுவனம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Upcoming Renault Kiger Spied With Boomerang Shaped LED DRLs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X