சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

ரெனால்ட் நிறுவனம் எச்பிசி என்ற குறியீட்டு பெயர் கொண்ட மாடலின் மூலமாக முதன்முறையாக சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் நுழைய ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த எஸ்யூவி கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சென்னையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

எச்பிசி மாடலின் காப்புரிமை ஆவணங்களின் மூலம் பார்க்கும்போது ரெனால்ட் நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலை கிகர் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளது. ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள இதன் ஸ்பை படங்கள் கூபே ஸ்டைலில் ரூஃப்லைன்னை இந்த கார் பெற்றிருப்பதை வெளிக்காட்டுகின்றன.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

இதன் விலை உயர்ந்த வேரியண்ட்கள் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் அமைப்பை பெறவுள்ள நிலையில் விலை குறைவான வேரியண்ட் ஆனது அலாய் சக்கரங்களுக்கு பதிலாக ஸ்டீல் சக்கரங்களை கொண்டிருக்கும்.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

ரெனால்ட்டின் ட்ரைபர் சப்-4 மீட்டர் எம்பிவி காரின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் புதிய கிகர் மாடலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் முன் மற்றும் பின் என இரு இருக்கை வரிசைகளில் அமர்பவர்களும் நன்கு கால்களை நீட்டி அமரும்படியான விசாலமான உட்புற கேபினை நிச்சயம் இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

இதன் கேபின், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இணைப்பு கார் தொழிற்நுட்பத்துடன் 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இரண்டிற்கும் அதிகமான காற்றுப்பைகள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

அதேபோல் கிகர் எஸ்யூவி மாடலில் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை ரெனால்ட் நிறுவனம் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைபர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அமைப்புடன் அந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ரெனால்ட்டின் எளிய-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

இதுமட்டுமின்றி 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினையும் கிகர் மாடல் பெறலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த கூடுதல் என்ஜின் தேர்விற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன.

சென்னை சாலையில் சோதனை ஓட்டத்தில் ரெனால்ட் கிகர் எஸ்யூவி கார்...

ரெனால்ட் நிறுவனம் கிகர் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படாததால் வரும் மாதங்களில் 2020 பண்டிக்கை காலத்திற்குள்ளாக இந்நிறுவனத்தில் இருந்து வெளியிடப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6- 8 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kiger HBC sub 4m SUV spied in Chennai alongside Triber
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X