ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

ரெனால்ட் இந்தியா நிறுவனம் பிஎஸ்6-க்கு இணக்கமான க்விட் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய காரின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.92 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

தற்போதைய பிஎஸ்4 க்விட் மாடலின் எஸ்டிடி, ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் க்ளிம்பர் என்ற அதே ஐந்து வேரியண்ட்களில் இந்த புதிய பிஎஸ்6 மாடலும் விற்பனை செய்யப்படவுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் பிஎஸ்4 மாடலை விட ரூ.9,000 விலையை அதிகமாக பெற்றுள்ளது. க்விட் பிஎஸ்6-ன் வேரியண்ட்கள் வாரியாக விலையை கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

Variant BS6 Price BS4 Price Difference
STD Rs 2.92 Lakh Rs 2.83 Lakh Rs 9,000
RxE 0.8 Rs 3.62 Lakh Rs 3.53 Lakh Rs 9,000
RxL 0.8 Rs 3.92 Lakh Rs 3.83 Lakh Rs 9,000
RxT 0.8 Rs 4.22 Lakh Rs 4.13 Lakh Rs 9,000
RxT 1.0 Rs 4.42 Lakh Rs 4.33 Lakh Rs 9,000
RxT (O) 1.0 Rs 4.50 Lakh Rs 4.41 Lakh Rs 9,000
RxT AT 1.0 Rs 4.72 Lakh Rs 4.63 Lakh Rs 9,000
RxT (O) AT 1.0 Rs 4.79 Lakh Rs 4.70 Lakh Rs 9,000
Climber Rs 4.63 Lakh Rs 4.54 Lakh Rs 9,000
Climber (O) Rs 4.71 Lakh Rs 4.62 Lakh Rs 9,000
Climber AT Rs 4.93 Lakh Rs 4.84 Lakh Rs 9,000
Climber (O) AT Rs 5.01 Lakh Rs 4.92 Lakh Rs 9,000
ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

பிஎஸ்6 அப்டேட் தவிர்த்து இந்த புதிய மாடலில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. என்ஜினின் வெளியிடும் ஆற்றல் அளவு உள்பட அனைத்தும் அப்படியே தான் இந்த பிஎஸ்6 மாடலில் தொடர்ந்துள்ளது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ள இந்த காரின் எண்ட்ரீ-லெவல் 0.8 லிட்டர் 799சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 54 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பெரிய 1.0 லிட்டர் என்ஜின் 68 பிஎச்பி பவர்/ 91 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்குகிறது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த காரில் இரு என்ஜின்களுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான 1.0 லிட்டர் என்ஜினுக்கு மட்டும் கூடுதலாக 5-ஸ்பீடு ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

பெரும்பான்மையான வசதிகள் முந்தைய வெர்சனில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டிருந்தாலும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள சில பாகங்கள் பிஎஸ்6 மாற்றத்தால் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவையாக புதிய அலாய் சக்கர டிசைன், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8.0 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங், பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை உள்ளன.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

14 இன்ச்சில் சக்கரங்கள் க்விட் ஹேட்ச்பேக் மாடலில் வழங்கப்படுகிறது. மேலே காட்டப்பட்டுள்ள விலை அட்டவணையின்படி, புதிய பிஎஸ்6 க்விட் மாடல் ரூ.2.92 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ளது. இந்த மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்டான க்ளிம்பர் (ஒ) ஏடி ரூ.5.01 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

க்விட் வரிசையில் கடைசியாக ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து க்விட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஃபேஸ்லிப்ட் ரூ.3.25 லட்சம் ஆரம்ப விலையுடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெனால்ட் க்விட் பிஎஸ்6 வெறும் ரூ.2.92 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்...!

மற்ற முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று ரெனால்ட் நிறுவனமும் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்த துவங்கியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள இந்த க்விட் பிஎஸ்6 மாடலுக்கு போட்டியாக சந்தையில் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி ஆல்டோ கே10 மற்றும் டட்சன் ரெடிகோ போன்ற கார்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid BS6 Launched In India: Prices Start At Rs 2.92 Lakh
Story first published: Wednesday, January 29, 2020, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X