பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஒரு லிட்டருக்கு 48 கிமீ மைலேஜை வாரி வழங்கும் வகையில், பெட்ரோல் இன்ஜின் கார் ஒன்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பல முன்னணி கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு புதிய மின்சார தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. மின்சார கார்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, அரசும் தற்போது தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஆனால் இந்தியாவில் கிடைக்கும் மின்சார கார்களில் அதிக ரேஞ்ச் (ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) வழங்க கூடிய பேட்டரிகள் இருந்தாலும், மின்சார கார்களை சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இங்கு இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதாவது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

எனவே மின்சார கார்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். சார்ஜ் தீர்ந்து கார் நடுவழியில் நின்று விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகிறது. ஆனால் கேரளாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று தற்போது இந்த பிரச்னைக்கு அருமையான தீர்வு ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

வழக்கமான ரெனால்ட் க்விட் கார் ஒன்றை, பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டாரில் இயங்கும்படி அவர்கள் மாடிஃபிகேஷன் செய்துள்ளனர். பைஜூ என் நாயர் என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹைமோட்டிவ் (Hymotiv) எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இந்த மாடிஃபிகேஷனுக்கு மூளையாக செயல்பட்டுள்ளது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இது பொறியியல் படிப்பில் சமீபத்தில் தேறிய ஒரு சில பொறியாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். இதற்கு முன்பாக இந்த மாணவர்கள் மாருதி 800 கார் ஒன்றை, மின்சார வாகனமாக மாற்றியிருந்தனர். தங்கள் படிப்பின் செய்முறை திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இதனை செய்திருந்தனர்.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஹைமோட்டிவ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர், அந்த மாணவர்களின் மாருதி 800 மின்சார காரின் காணொளியை பார்த்துள்ளார். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடைய தொழிலுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஹைமோட்டிவ் நிறுவனம் ரெனால்ட் க்விட் காரில் செய்துள்ள மாடிஃபிகேஷன்கள் அசத்தலாக உள்ளன.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பதற்கு இந்த கார் மாடிஃபிகேஷன்கள் எதுவும் செய்யப்படாமல் அப்படியே இருப்பது போல் தோன்றுகிறது. அதேபோல் ஹூட்டிற்கு அடியே இன்ஜினும் அப்படியே உள்ளது. எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஹூட்டிற்கு அடியே சிறிய டிவைஸ் ஒன்றை அவர்கள் பொருத்தியுள்ளனர். காரின் உமிழ்வு அளவுகளை அது கட்டுப்படுத்துகிறது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இதன் மூலமாக பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும்போது, முன்பை விட இந்த கார் தற்போது 60 சதவீதம் அதிக தூய்மையானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரின் எரிபொருள் சிக்கனத்தை இந்த டிவைஸ் 20 சதவீதம் மேம்படுத்துகிறது. இந்த காரின் பின் பக்க சக்கரங்களுக்கு உள்ளே மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இது இன்-வீல் மோட்டார் டெக்னாலஜி என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்துதலின் ஒரு பகுதியாக தற்போது இந்த காரின் 4 சக்கரங்களும் டிஸ்க் பிரேக்கை பெற்றுள்ளன. இந்த காரின் பின் பக்க சக்கரங்களுக்கு மின்சார மோட்டார்கள் சக்தியை வழங்குகின்றன.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

அதே சமயம் வழக்கமான 800 சிசி பெட்ரோல் இன்ஜின், முன் பக்க சக்கரங்களுக்கு சக்தியை வழங்குகிறது. மின்சார மோட்டாரில் இருந்து கிடைக்கும் சக்தியை பயன்படுத்தி இந்த காரை 150 கிலோ மீட்டர்கள் வரை ஓட்ட முடியும். பேட்டரி தீர்ந்து விட்டால், மீண்டும் சார்ஜ் செய்வதை பற்றி கவலைப்படாமல், பெட்ரோல் இன்ஜினுக்கு மாற்றி, காரை தொடர்ந்து ஓட்ட முடியும்.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஓட்டுனர் விரும்பினால், ஒரே நேரத்தில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டார் ஆகிய இரண்டின் மூலமும் காரை ஓட்ட முடியும் என்பது சிறப்பம்சமாகும். அவ்வாறு செய்யும்போது, இந்த செக்மெண்ட்டில் உள்ள வேறு எந்த காரை விடவும் அதிக பவர் மற்றும் டார்க் திறனை இந்த கார் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இந்த கார் வேலை செய்யும் விதத்தை பார்த்து, காணொளியை தொகுத்து வழங்கிய நபர் வியப்படைந்தார். ஒரே நேரத்தில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டாரை பயன்படுத்துவதில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் எரிபொருள் சிக்கனம்தான். இந்த காரின் ஒருங்கிணைந்த மைலேஜ் ஒரு லிட்டருக்கு 48 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே பெரிய விஷயம்.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

ஆனால் இந்த கார் இன்னும் புரோட்டோடைப் நிலையில்தான் உள்ளது. தற்போது சில சிறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஹைமோட்டிவ் குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டால், ஹைமோட்டிவ் நிறுவனம் இந்த காரை சந்தையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால ஆட்டோமொபைல் உலகம் நிச்சயமாக மின்சார வாகனங்களைதான் சார்ந்து இருக்கப்போகிறது என்னும் நிலையில், இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. பேட்டரியின் ரேஞ்ச் குறித்து கவலைப்படாமல் ஒரு மின்சார காரை வைத்திருக்கும் சௌகரியத்தை இது வழங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.

பெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன்... ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான காரை உருவாக்கிய ஹைமோட்டிவ் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு சமூக வலை தளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய ஆட்டோமொபைல் துறையில், குறிப்பாக மின்சார வாகன செக்மெண்ட்டில், மிகச்சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இதுபோல் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Renault Kwid Hatchback Modified Into An Electric Hybrid - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X