மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

ரெனால்ட் நிறுவனம், க்விட் மாடலின் லைன்அப்பில் புதியதாக ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டை இணைத்துள்ளது. தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய க்விட் வேரியண்ட்டின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

க்விட் மாடலின் புதிய ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் புதியதாக 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. க்விட் மாடலில் ஏற்கனவே ஆர்எக்ஸ்எல் வேரியண்ட் உள்ளது. ஆனால் இதில் 800சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டு வருகிறது.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

மற்றப்படி தொழிற்நுட்பங்களிலும் தோற்றத்திலும் இரண்டும் ஒரே மாதிரியே விளங்கவுள்ளன. இதனால் இந்த இரு ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்களுக்கும் வித்தியாசமாக இருப்பது என்ஜின் அமைப்பு மட்டுமே.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய 999சிசி 3-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வை பெற்றுள்ள க்விட் ஆர்எக்ஸ்எல் மாடலின் விலை ரூ.4.16 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

இது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் விலையாகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் இந்த காரின் விலை ரூ.4.48 லட்சமாக உள்ளது. இதற்கிடையில் விற்பனையில் 3.5 லட்சம் என்ற மைல்கல்லை ரெனால்ட் க்விட் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் கடந்துள்ளது. இதனை நினைவுக்கூறும் விதமாகவே இந்த புதிய வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகம் குறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமில்லபல்லே கூறுகையில், சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட க்விட் மாடல் இந்திய சந்தையில் விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

இதனால் க்விட் தான் எங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பாளராக விளங்குகிறது. 3.5 லட்சத்திற்கும் அதிகமான க்விட் குடும்பங்களுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் ரெனால்ட் பிராண்டில் வழங்கிய நம்பிக்கைக்கு நாங்கள் மிகுந்த நன்றியுணர்வை கொண்டுள்ளோம்.

மார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்

க்விட், அறிமுகத்தின்போது வடிவமைப்பு, புதுமை மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றில் திருப்புமுனை தயாரிப்பு விளங்கியது. அது இன்னும் தொடர்கிறது என கூறினார். இந்த புதிய வேரியண்ட்டின் அறிமுகத்தால் சந்தையில் ரெனால்ட் க்விட் மாடலின் வேரியண்ட்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Kwid RXL 1.0 litre variant launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X