Just In
- 24 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவுக்கு இடையிலும் இந்தியாவில் புதிதாக 17 டீலர்களை திறந்தது ரெனோ!
கொரோனாவுக்கு இடையிலும் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளில் ரெனோ கார் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 17 புதிய கார் டீலர்களை திறந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் குறுகிய காலத்தில் இந்தியாவில் மிக வேமகாக வளர்ச்சி பெறும் கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. மஹிந்திரா கூட்டணியை முறித்துக் கொண்டு நம்பிக்கையுடன் தனி ஆவர்த்தனம் நடத்தி வரும் ரெனோ இந்தியர்களின் நாடித்துடிப்பை கச்சிதமாக பிடித்து பார்த்து, சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்தியர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் மிகச் சரியான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட க்விட், ட்ரைபர் உள்ளிட்ட கார் மாடல்கள் அந்நிறுவனத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

அதேபோன்று, டஸ்ட்டர் எஸ்யூவியும் ரெனோ நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக இந்தியர்கள் மத்தியில் பெயர் பெற்றுவிட்டது. இந்த நிலையில், அடுத்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவியையும், டஸ்ட்டர் எஸ்யூவியின் பவர்ஃபுல் பெட்ரோல் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த மாதமே ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய மாடல்களுக்கு வலு சேர்க்கவும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்கும் விதத்திலும், டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா காலத்தில் பல கார் நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்க செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்தி வைத்தன. ஆனால், ரெனோ கார் நிறுவனம் அதிக நம்பிக்கையுடன் கடந்த ஏப்ரல் - ஜூலை இடையிலான காலக்கட்டத்தில் 14 புதிய கார் ஷோரூம்களையும், 3 புதிய சர்வீஸ் மையங்களையும் திறந்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் 4 டீலர்களும், தெலங்கானாவில் 3 டீலர்களும், ராஜஸ்தானில் 2 டீலர்களும், உத்தரபிரதேசத்தில் 2 டீலர்களும், தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, அஸ்ஸாம் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒரு புதிய டீலர்ஷிப்பும் திறக்கப்பட்டுள்ளன.

புதிய டீலர்களையும் சேர்த்து நாடு முழுவதும் 390 விற்பனை மையங்களையும், 470 சர்வீஸ் மையங்களையும் ரெனோ கார் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த புதிய ரெனோ கார் டீலர்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் இன்னும் நெருக்கமான சேவைகளை பெற முடியும். இது வர்த்தகத்தில் கூடுதல் வலுசேர்க்கும் அம்சமாகவும் ரெனோ கருதுகிறது.