திசம்பரிலும் திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் ரெனோ விற்பனை விர்ர்.... !!

ரெனோ கார் நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்து, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டுள்ளது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்திய சந்தைக்கான வர்த்தக கொள்கைகளை மிகச் சரியாக வகுத்து செயலாற்றி வருகிறது. இதற்கு கைமேல் பலனாக விற்பனை மிகச் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

இந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவில் 11,964 கார்களை விற்பனை செய்து இந்தியாவின் நான்காவது பெரிய கார் நிறுவனமாக உயர்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையை கடந்த மாதத்துடன் ஒப்பிட்டால், 64.73 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

குறிப்பாக, ரெனோ கார் நிறுவனத்தின் புதிய வரவான ட்ரைபர் கார் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. கடந்த மாதம் 5,631 ட்ரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆண்டு கடைசியில் கார் விற்பனை சுணக்கம் கண்டாலும், ட்ரைபர் விற்பனை மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

அதாவது, ரெனோ நிறுவனத்தின் விற்பனையில் பாதி அளவு விற்பனையை ட்ரைபர் கார் வழங்கி இருக்கிறது. ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கும் 7 சீட்டர் மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம்.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

சிறப்பான தோற்றம், அதிக தொழில்நுட்ப வசதிகள், நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ப இருக்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதிகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

இந்த காரில் எல்இடி விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அத்துனை நவீன அம்சங்களும் உள்ளன. இதில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

கடந்த 2010ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணி முறித்துக் கொண்டு இந்தியாவில் தனி ஆவர்த்தனத்தை துவங்கப்போவதாக அறிவித்தது. முதல் மாடலாக புளூயன்ஸ் காரையும், அடுத்து கோலியோஸ் காரையும் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு அந்நிறுவனம் கொண்டு வந்த ரெனோ டஸ்ட்டர் ஹிட் மாடலாக மாறியது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

தனது சர்வதேச கூட்டாளியான நிஸான் நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனம் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் செய்து அறிமுகப்படுத்திய பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்கள் கைகொடுக்கவில்லை. எனினும், இந்தியர்களின் நாடித்துடிப்பை புரிந்து கொண்டு இந்தியாவுக்கான பிரத்யேக மாடல்களை களமிறக்கினால் மட்டுமே ஓட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

அதன்படி, க்விட் காரை அறிமுகப்படுத்தியது. க்விட் ஹிட் அடித்த நிலையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ட்ரைபர் காரும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், இந்திய கார் மார்க்கெட்டில் ரெனோ கார் நிறுவனம் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

திசம்பரிலும் ரெனோவுக்கு திவ்யம்... ட்ரைபர் புண்ணியத்தில் விற்பனை விர்ர்.... !!

தனது மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக் கொள்ளும் விதமாக, அடுத்து காம்பேக்ட் எஸ்யூவி காரையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரும் சந்தையில் மிக குறைவான விலை தேர்வாக வரும் என்பதால், நிச்சயம் ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French car maker, Renault sold 11,964 cars in India December 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X