2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2019-20 பொருளாதார ஆண்டின் விற்பனை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, வேறெந்த ப்ராண்ட்டும் இல்லாமல் ரெனால்ட் மட்டும் தான் ஒரே ஒரு நிறுவனமாக விற்பனையில் வளர்ச்சியை இந்த காலக்கட்டத்தில் கண்டுள்ளது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

இதற்கு முந்தைய பொருளாதார ஆண்டை காட்டிலும் இந்நிறுவனம் கடந்த பொருளாதார ஆண்டில் 12 சதவீதம் கூடுதலான விற்பனை எண்ணிக்கைகளை சந்தையில் பதிவு செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் 2019-20 ஆண்டில் 89,534 யூனிட்களை சந்தையில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 79,654 யூனிட் கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2018-19 பொருளாதார ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும்.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு 2019-20 பொருளாதார ஆண்டு கடினமான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். 2019ஆம் ஆண்டின் பல மாதங்களில் தயாரிப்புகளின் விற்பனையில் மந்த நிலை நிலவி வந்த நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

இதனால் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் என இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களாக உள்ளவை அனைத்தும் விற்பனையில் மிக பெரிய சரிவை கண்டுள்ளன. இதில் மிக மோசமாக டாடா மோட்டார்ஸ் சுமார் 71 சதவீத வீழ்ச்சியை நடந்து முடிந்த கடந்த பொருளாதார சந்தித்துள்ளது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

ஆனால் ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் இவ்வாறான வளர்ச்சியை பெற்றிருப்பது மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்திற்கு, சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ட்ரைபர் எம்பிவி மற்றும் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வரவேற்பு தான் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

ஏனெனில் இந்த இரு கார்களிலும் புத்துணர்ச்சியான டிசைன் அமைப்பையும், அதிகப்படியான தொழிற்நுட்ப வசதிகளையும் ரெனால்ட் நிறுவனம் கொண்டு வந்திருந்தது. இதனால் இவ்விரு மாடல்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

இதுமட்டுமின்றி ட்ரைபர் எம்பிவி மற்றும் க்விட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு இந்நிறுவனம் எக்ஸ்ஷோரூமில் நிர்ணயித்த மற்ற மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமான விலையும் இவற்றின் பிரபலத்திற்கு காரணம். 2019-20 பொருளாதார ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கையில் ட்ரைபர் மாடல் மட்டுமே 33,000 யூனிட்களை பெற்றுள்ளது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

அதேசமயம் க்விட் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் 46,000 யூனிட்கள் கடந்த பொருளாதார ஆண்டில் விற்பனையாகியுள்ளது. இவற்றிற்கு அடுத்து இந்நிறுவனத்தின் எஸ்யூவி மாடலான டஸ்டர் 7,837 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இவற்றை தவிர்த்து இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை வாடிக்கையாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கேப்சர் மற்றும் லாட்ஜி மாடல்கள் மட்டும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக 3 இலக்கங்களில் விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது.

2019-20 பொருளாதார ஆண்டில் விற்பனையில் முன்னேற்றத்தை கண்ட ஒரே நிறுவனம்... மாருதி சுஸுகி கூட இல்லை...

ரெனால்ட், இந்திய சந்தையில் வலுவாக கால் பதிக்க கடந்த சில வருடங்களாக போராடி வரும் நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் இந்த விற்பனை முன்னேற்றம் நிச்சயம் இதன் எதிர்கால மாடல்களின் விற்பனையில் பிரதிபலிக்கும்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India Sales In FY 2019-20 Registers 12% Growth: Only Brand To Register Sales Growth
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X