ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலை பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

முழுக்க முழுக்க மறைப்பால் மறைக்கப்பட்டுள்ள இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் தற்போதைக்கு எச்பிசி என்கிற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த எச்பிசி காரை பற்றிய தகவல்கள் மற்றும் சோதனை ஓட்ட புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாக தான் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

புதிய சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த கார் இந்த ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் மூன்றாவது மாடலாகும். இதற்கு முன்பு இதே கட்டமைப்பில் ரெனால்ட்டின் க்விட் மற்றும் ட்ரைபர் கார்கள் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த காரை பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால் டிசைன், பெயிண்ட் அமைப்பு மற்றும் தொழிற்நுட்பங்கள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எச்பிசி எஸ்யூவி மாடலை மொத்தமாக பார்த்தோமேயானால், புதுமையான தோற்றத்தை இந்த கார் கொண்டுள்ளது. குறிப்பாக முன்புறம் க்விட் மற்றும் ட்ரைபர் மாடல்களை ஒத்துள்ளது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எச்பிசி எஸ்யூவி வேறொரு பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த புதிய எஸ்யூவி கார் 95 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

இதே சிஎம்எஃப்-ஏ+ கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட ட்ரைபர் மாடலின் டிசைன் உள்ளிட்டவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இந்த கட்டமைப்பில் தயாரிக்கப்படும் கார்கள் அடிப்படையான செயல்படுத்திறனில் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை.

இந்த எஸ்யூவி காரின் விலையுயர்ந்த வேரியண்ட்கள் பெரிய அளவிலான எச்ஆர் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை பெறவுள்ளதாக கசிந்துள்ள தகவல்கள் கூறுகின்றன. மற்றப்படி இந்த மாடலின் டீசல் வேரியண்ட்களை பற்றி விபரமும் வெளியாகவில்லை.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

இந்திய சந்தையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் தேர்வுகளை கொண்ட கார்களுக்கு கடுமையான தேவை ஏற்பட்டு வருவதால், இந்த புதிய எஸ்யூவி காரில் இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் வழங்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

இந்நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் மற்றும் ட்ரைபர் எம்பிவி மாடல்களின் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தான் தனது புதிய எஸ்யூவி மாடலை இந்த இரு கார்கள் தயாரிக்கப்பட்ட ஃப்ளாட்ஃபாரத்திலேயே ரெனால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

இந்திய சந்தையில் வலுவாக காலூன்ற நிஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டுவரும் ரெனால்ட், தனது புதிய தயாரிப்பு கார்களுக்கு குறைவான விலையை நிர்ணயிக்கவே முயற்சித்து வருகிறது. இதனால் இந்நிறுவனத்தால் அதிக விலை கொண்ட மாடல்களின் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட முடிவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ட்ரைபர் வடிவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ள ரெனால்ட்...

குறிப்பாக ஒவ்வொரு மாதமும் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்றுவந்த டஸ்டர் மாடலின் தற்போதைய தலைமுறை கார் பெரியளவில் சந்தை பங்கை பெறவில்லை. இதற்கு டஸ்டர் மாடல் நிலைநிறுத்தப்பட்டுள்ள காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள கடுமையான போட்டியையும் ஒரு காரணமாக சொல்லலாம். இதனால் இந்த புதிய எச்பிசி எஸ்யூவி மாடலை பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault sub 4 meter SUV spy video and pictures
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X