விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ரெனால்ட் ட்ரைபர் மாடலின் புதிய ஏஎம்டி வேரியண்ட்டிற்கான முன்பதிவுகள் கடந்த வாரத்தில் இருந்து துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

முன்பதிவு துவங்கப்படுவது மட்டுமில்லாமல் வருகிற 18ஆம் தேதியில் தான் ரெனால்ட் ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுகவுள்ளதாகவும் இந்த செய்தி கூறுகிறது. ரெனால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் ட்ரைபர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

MOST READ: ஹைப்ரீட் கார்களின் விற்பனையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் டொயோட்டா...

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

அப்போதிலிருந்து இந்த கார் கடந்த மார்ச் மாதம் வரையில் சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கி வந்துள்ளது. ரெனால்ட் க்விட் மாடலை விற்பனையில் முந்தியுள்ள இந்த காரின் பிஎஸ்6 வெர்சன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என்ற நான்கு ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் ட்ரைபர் மாடல் வருகிற 18ஆம் தேதியில் இருந்து புதியதாக ஏஎம்டி வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். ட்ரைபர் மாடலில் புதியதாக ஏஎம்டி வெர்சனை இந்நிறுவனம் கொண்டுவருவதற்கு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் மட்டுமே உள்ளது.

MOST READ: சிங்கம் பட பாணியில் ஸ்டண்ட்! அடவாடி சாகசம் செய்த போலீசுக்கு ஆப்பு வைத்த காவல்துறை... என்னனு தெரியுமா

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் புதிய ஏஎம்டி வேரியண்ட் கிட்டத்தட்ட ரெனால்ட் ட்ரைபரின் மேனுவல் மாடல்களை தான் ஒத்து காணப்படும். இதனால் இதன் வெளிப்புறத்தில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், வீல் ஆர்ச் க்ளாடிங், காரின் உடல் நிறத்தில் பம்பர், க்ரோம் பொருத்தப்பட்ட முன்புற க்ரில், பொருட்களை வைப்பதற்கு ஏதுவான ரூஃப் ரெயில்கள் மற்றும் ஸ்டைலான ஸ்கிட் ப்ளேட்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

உட்புற தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ட்ரைபர் மாடல் ஏற்கனவே பயணிகளின் சவுகரியத்திற்கு உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான எலக்ட்ரிக் பவர் ஸ்டேரிங், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், 12 வோல்ட் சாக்கெட், கூல்டு க்ளோவ் பாக்ஸ், மடக்கி நீட்டும் வகையிலான இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இருக்கைகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

MOST READ: பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

பாதுகாப்பிற்கு இந்த எஸ்யூவி காரில் இபிடியிடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், ட்யூல் காற்றுப்பைகள், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, பின்புற பார்க்கிங் சென்சார் & கேமிரா, சீட் பெல்ட்டை நினைவூட்டும் மற்றும் பாதசாரிகள் மீது மோதுவதை தடுக்கும் வசதி போன்றவை உள்ளன.

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

ரெனால்ட் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை ட்ரைபரில் வழங்கி வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. என்ஜினின் இந்த ஆற்றல் அளவு புதிய ஏஎம்டி வெர்சனில் மாறுப்படலாம். இந்த என்ஜின் முக்கிய அம்சமாக ட்யூல் விவிடி சிஸ்டத்தை கொண்டுள்ளது.

MOST READ: ஃபேம்லியோட கேக் வெட்டி கார் டெலிவரி எடுத்த காலம் போச்சு... சின்ன சின்ன சந்தோஷத்தை பறித்த கொரோனா

விற்பனை அதிகரிக்க புதிய முயற்சியை கையாளும் ரெனால்ட்... பலன் அளிக்குமா..?

இந்த சிஸ்டம் மூலமாக மேம்படுத்தப்பட்ட ஆக்ஸலேரேஷனை பெற முடியும். ட்ரைபரின் மற்ற மேனுவல் மாடகளுடன் ஒப்பிடும்போது புதிய ஏஎம்டி வெர்சன் ரூ.50 ஆயிரத்தை கூடுதல் விலையாக பெறவுள்ளது. ட்ரைபர் மேனுவல் மாடல்கள் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.6.82 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Triber AMT to help increase sales details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X