ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

கடந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், ரெனோ நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் விதமாக, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

சில மாதங்களுக்கு முன் ரூ.4.95 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்த இந்த காரின் பிஎஸ்-6 மாடல்களின் விலை அதிகரித்துள்ளது. பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.4,000 வரையிலும் பிற, உயர் ரக வேரியண்ட்டுகளின் விலை ரூ.15,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Variants BS6 Price BS4 Price Difference
RXE Rs 4.99 Lakh Rs 4.95 Lakh Rs 4,000
RXL Rs 5.74 Lakh Rs 5.59 Lakh Rs 15,000
RXT Rs 6.24 Lakh Rs 6.09 Lakh Rs 15,000
RXZ Rs 6.78 Lakh Rs 6.63 Lakh Rs 15,000
ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

தற்போது ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல்களின் விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.78 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

ரெனோ ட்ரைபர் காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகராக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கும் ரெனோ ட்ரைபர் காரின் விலை அதிகரிக்கப்பட்டாலும், தொடர்ந்து மதிப்பு வாய்ந்த மாடலாகவே இருக்கும். இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பு அம்சங்கள் தொடர்ந்து மதிப்பை தக்க வைக்கின்றன.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 7 பேர் செல்வதற்கான இடவசதியை அளிக்கிறது. மேலும், இருக்கை அமைப்புகளை பயன்பாட்டிற்கு தக்கவாறு எளிதாக மாற்றும் வசதியுடன் இந்த கார் கிடைப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மேலும், விலை குறைவான பட்ஜெட் கார் மாடலாக இருந்தாலும், நேர்த்தியான வடிவமைப்பு, எல்இடி பகல்வேளை விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்கஃப் பிளேட், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை கவர்ச்சியை அதிகரித்து காட்டுகின்றன.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மென்மையான உணர்வை வழங்கும் பிளாஸ்டிக் பாகங்கள், சில்வர் அலங்கார வேலைப்பாடுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

எலெக்ட்ரிக் பூட் ரிலீஸ் வசதி, 12V சார்ஜ் சாக்கெட்டுகள், ஸ்மார்ட் அக்செஸ் கார்டு, இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு தனித்தனி ஏசி வென்ட்டுகள் ஆகியவையும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான வசதிகளாக இருக்கின்றன.

ரெனோ ட்ரைபர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய ரெனோ ட்ரைபர் காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், விபத்தின்போது கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி, அதிவேக எச்சரிக்கை வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன.

Most Read Articles
English summary
The all-new Renault Triber BS6 variant has just been launched in India at a starting price of Rs 4.99 lakh, ex-showroom, Delhi. The upgraded model has received only an engine upgrade, while the rest of the vehicle remains the same.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X