ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

ரெனால்ட் நிறுவனம் அதன் எம்பிவி ரக காரான ட்ரைபரின் எக்ஸ்ஷோரூம் விலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

ட்ரைபர் எம்பிவி காரை முதன்முறையாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் இதன் எக்ஸ்ஷோரூம் விலைகள் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளன.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

இந்த வரிசையில் தற்போது நான்காவது முறையாக இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய மூன்று தடவையும் இந்த எம்பிவி காரின் ஆரம்ப நிலை ஆர்xஇ வேரியண்ட் எந்தவொரு விலை உயர்வையும் பெறவில்லை. ஆனால் இம்முறை இதன் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

இந்த வகையில் ட்ரைபரின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.11,500-ல் இருந்து ரூ.13,000 வரையில் விலை அதிகரிப்பை ஏற்றுள்ளன. இந்த விலை அதிகரிப்பினால் ட்ரைபரின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.12 லட்சமாக அதிகரித்துள்ளது. முன்பு இது ரூ.4.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்
Triber New Price Old Price Difference
RxE ₹5,12,000 ₹4,99,000 ₹13,000
RxL ₹5,89,500 ₹5,78,000 ₹11,500
RxL AMT ₹6,29,500 ₹6,18,000 ₹11,500
RxT ₹6,39,500 ₹6,28,000 ₹11,500
RxT AMT ₹6,79,500 ₹6,68,000 ₹11,500
RxZ ₹6,94,500 ₹6,82,000 ₹12,500
RxZ AMT ₹7,34,500 ₹7,22,000 ₹12,500

அதேபோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படும் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் ரூ.7.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் அட்டகாசமான தோற்றம் மற்றும் சிறப்பான தொழிற்நுட்ப தொகுப்புகளுடன் இப்போதும் இந்த எம்பிவி கார் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வாகனமாகவே பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

இதனால்தான் கடந்த ஆண்டு அறிமுகத்தில் இருந்து இதுவரை 40,000-க்கும் அதிகமான ட்ரைபர் கார்களை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இயக்க ஆற்றலிற்கு ட்ரைபரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் எதிர்காலத்தில் புதிய 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் ட்ரைபரில் வழங்க ரெனால்ட் திட்டமிட்டு வருகிறது.

ரெனால்ட் ட்ரைபரின் விலை நான்காவது முறையாக அதிகரிப்பு... இருப்பினும் இதுதான் விலைகுறைவான எம்பிவி கார்

ரெனால்ட் ட்ரைபர், மலிவான விலையில் கிடைக்கும் ஏழு-இருக்கை வாகனமாகும். இத்தகைய வாகனத்தில் தொடர்ந்து கொண்டுவரப்படும் விலை உயர்வுகள் அதனை விலையுயர்ந்த காராக சிறிது சிறிதாக மாற்றி கொண்டுவந்தாலும், இப்போதும் இந்திய சந்தையில் கிடைக்கும் ஏழு-இருக்கை எம்பிவி கார்களில் விலை குறைவானதாக ட்ரைபர் தான் விளங்குகிறது.

Most Read Articles
English summary
Renault Triber AMT, Manual Prices increased – Old vs New Price List Pearl Daniels Pearl Daniels September 21, 2020 Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X