ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், மைலேஜ், மிக குறைவான பட்ஜெட் என வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை தரும் மாடலாகவும் இருந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

இந்த நிலையில், ரெனோ ட்ரைபர் காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போதுமான பவர் கொண்டதாக இல்லை என்ற கருத்து பரவலாக வாடிக்கையாளர் மத்தியில் இருக்கிறது. இந்த குறையை களையும் விதமாக புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்குவதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

தற்போது பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த பெட்ரோல் எஞ்சின் இதுவரை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வந்த நிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் இனி கிடைக்கும். இது பிஎஸ்-6 தரமுடைய எஞ்சினாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இது நிச்சயமாக இந்த 7 சீட்டர் மாடலுக்கு போதுமான திறனை வழங்கும் என்று நம்பலாம்.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். அதேபோன்று, சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்து எந்த உறுதியானத் தகவலும் இதுவரை இல்லை.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் HR10 1.0L என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. ரெனோவின் HR13 1.3L பெட்ரோல் எஞ்சினில் மாறுதல்கள் செய்து இது சிசி குறைக்கப்பட்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினாக கொண்டு வரப்படுகிறது. இந்த எஞ்சின் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

ரெனோவின் HR13 டர்போ பெட்ரோல் எஞ்சின் ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டு நிறுவனம் மற்றும் டெய்ம்லர் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இந்த HR13 பெட்ரோல் எஞ்சின் இந்த கூட்டணியின் பல கார் மாடல்களில் பயன்படுத்துகிறது. HR13 எஞ்சின் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரெனோ ட்ரைபர் காரில் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின்... இருந்த ஓரே குறையும் தீர்கிறது!

இந்த எஞ்சினும், இதன் அடிப்படையிலான HR10 எஞ்சினும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles
English summary
Renault is planning to launch Triber with new petrol engine option in India very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X