சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றின் மூலமாக தனது உலகளாவிய எலக்ட்ரிக் வாகனங்களின் லைன்அப்-ஐ விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட்டின் இந்த புதிய எலக்ட்ரிக் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-இவி ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரானது, க்ராஸ்ஓவர் தோற்றத்தையும் கொண்டிருக்கும். இந்த மாடலை ஜெனிவாவில் கடந்த மாதம் நடைபெற இருந்த மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்த ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

ஆனால் அதற்குள்ளாக இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், வருகிற அக்டோபர் மாதம் பாரிஸில் நடைபெறவுள்ள 2020 மோட்டார் கண்காட்சியில் இந்த எலக்ட்ரிக் கார் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

MOST READ: கார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்!

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

பெரும்பாலான ஸ்டைலிங் பாகங்களை இந்நிறுவனத்தின் மொர்போஸ் கான்செப்ட் மாடலில் இருந்து பெற்றுள்ள ரெனால்ட்டின் இந்த க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரின் நீளம் 4.2மீ-ல் வடிவமைக்கப்படவுள்ளது. இதனால் இந்த எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட ரெனால்ட் கேப்சர் மாடலுடன் நீளத்தில் ஒத்து காணப்படும்.

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

ரெனால்ட்டின் இந்த புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடல் குறித்து வெளியாகி வருகின்ற தகவல்களில் இந்த கார் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற டிசைனில் ப்ளாஸ்டிக் க்ளாடிங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. உட்புறத்திலும் இந்த எலக்ட்ரிக் கார், மொர்போஸ் கான்செப்ட் மாடலை பின்பற்றியுள்ளது.

MOST READ: ரூ.1 லட்சத்தில் விற்கப்பட்ட டாடா நானோ & சஃபாரி ஸ்ட்ரோம் கார்களின் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்...

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இந்த வகையில் 10.2 இன்ச் திரையை டேஸ்போர்ட்டின் மத்தியில் பெறவுள்ள இந்த கார், அகலமாக L-வடிவிலான திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எதிர்கால டிசைனில் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை பெறவுள்ளது. உலகளாவிய சந்தையில் இந்த எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடலுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திறன் கொண்ட பேட்டரி தொகுப்புகள் மற்றும் வெளியிடு ஆற்றல் அளவுகள் வழங்கப்படவுள்ளன.

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இதனால் இந்த எலக்ட்ரிக் கார் சிங்கிள்-சார்ஜில் 550-600கிமீ வரையிலான ரேஞ்ச்களில் இயங்கும். இந்நிறுவனத்தின் ஜோ இவி காரில் 55 kWh ஆற்றல் கொண்ட பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரி, சிங்கிள் சார்ஜில் 400 கிமீ தூரம் வரை காரை இயக்கும் திறனை பெற்றுள்ளது.

MOST READ: சும்மாவா சொன்னாங்க தாயை சிறந்ததொரு கோவில் இல்லைனு! மகனுக்காக தனியொரு ஆளாக 1,400 கிமீ பயணித்த பெண்..

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

ரெனால்ட்டின் இந்த புதிய க்ராஸ்ஓவர் இவி கார் இதனை விட பெரியதான பேட்டரி தொகுப்பை பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெனால்ட் நிறுவனம் பெரிய அளவிலான புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி மாடல் 2022ல் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

அடுத்த ஆண்டில் அறிமுகமாகக்கூடும் என கூறப்படும் ரெனால்ட்டின் புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடலுடன் சிஎம்எஃப்-இவி ப்ளாட்ஃபாரத்தை இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் பகிர்ந்து கொள்ளவுள்ளது. ரெனால்ட்டின் இந்த புதிய மாடுலர் எலக்ட்ரிக் கட்டமைப்பின் மூலம் தயாரிக்கப்படும் மாடல்களில் ரேஞ்ச், பவர் மற்றும் திறனில் வெவ்வேறு விதமான உள்ளமைவுகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Renault Electric Crossover To Deliver 600km Range; Debut in 2021
Story first published: Saturday, April 11, 2020, 16:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X