ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்திய சந்தையில் வலுவான வர்த்தகத்தை நோக்கி புதிய கார் மாடல்களை களமிறக்கி வருகிறது. க்விட், ட்ரைபர் கார்கள் மூலமாக வலுவான வர்த்தகத்தை பதிவு செய்ய துவங்கி இருக்கும் அந்நிறுவனம், அடுத்ததாக எலெக்ட்ரிக் கார் மார்க்கெட் மூலமாக சந்தை விரிவாக்கத்தை மனதில் வைத்து செயலாற்றி வருகிறது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

அதன்படி, அந்நிறுவனத்தின் பிரபலமான ஸோயி ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

அடுத்த மாதம் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஸோயி எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எலெக்ட்ரிக் கார் சந்தையில் பரபரப்பு கூடி இருக்கிறது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ஆட்டோ எக்ஸ்போவில் ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் காருக்கு இந்திய பார்வையாளர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இறுதி முடிவை ரெனோ எடுக்கும். ஒருவேளை இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டால், பல்வேறு மாற்றங்களுடன் கொண்டு வரப்படும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் 4,087 மிமீ நீளமும், 1,787 மிமீ அகலமும், 1,562 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். 2,588 மிமீ வீல் பேஸ் நீளம் பெற்றிருக்கிறது. இந்தியா வரும்போது மாற்றங்கள் இருக்கலாம்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்திய தட்ப வெப்ப நிலைகளுக்கு தக்கவாறு பேட்டரி மற்றும் மின்மோட்டார்கள் பயன்படுத்தப்படும். அதேபோன்று, இந்திய சாலை நிலைகளுக்கு உகந்த வகையிலும் தொழில்நுட்ப மற்றும் டிசைன் மாற்றங்கள் செய்யப்படும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் காரில் 41kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படும். இந்த காரின் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செயாத்ல 300 முதல் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த காருக்கு சாதாரண வீட்டு சார்ஜர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது?

ரெனோ ஸோயி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு நேரடியாக போட்டி போடும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கும் போட்டியை தரலாம்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is said to be considering bringing in the Zoe electric hatchback in the Indian market. According to report, the Renault Zoe is being considered for the Indian market, with the electric hatchback expected to go on sale sometime in late-2020 or early-2021.
Story first published: Wednesday, January 8, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X