வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை நடு ரோட்லயே விட்டுட்டு ஓடிய நபர்! இப்படி நடந்தா ஓடாம அங்கேயேவா இருப்பாங்க!

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்து இளைஞர் ஒருவர், ஓர் சம்பவத்திற்கு பின்னர் அக்காரை நடு ரோட்டிலேயே விட்டுவிட்டு ஓடியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலே ஆடம்பரம், சொகுசு மற்றும் உச்சபட்ச விலைக்கு உரித்தானது ஆகிய இந்த விஷயங்களே நமது நினைவுக்கு முதலில் வரும். இத்தகைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக வலம் வர வேண்டும் என நினைத்து வாடகைக்கு எடுத்தவருக்கு மிகவும் கசப்பான அனுபவம் ஒன்று கிடைத்திருக்கின்றது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

ஆம், வாடகைக்கு எடுக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை அந்த இளைஞர் அறியாமையால் விபத்தில் சிக்க வைத்துள்ளார். இந்த கார் மோதி சேதத்தை ஏற்படுத்தியதும் ஓர் விலையுயர்ந்த காராகும். அது, லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் ஆகும். இக்கார், இந்தியாவில் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இத்தகைய உச்சபட்ச விலையுடைய காரையே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாடைக்கு எடுத்த நபர் பின் பகுதியில் மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால், இரு கார்களுக்கும் மிகப்பெரிய சேதத்தைச் சந்திருக்கின்றன. சேதம் என சுட்டிக் காட்டுவதைக் காட்டிலும் இதனை விலையுயர்ந்த விபத்து என்றே கூறலாம்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை பல கோடிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இக்கார், சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. எனவேதான் இந்தியா மட்டுமில்லாமல் சில வெளிநாடுகளிலும் இக்காரை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கின்றது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இத்தகைய விலையுயர்ந்த காரே மற்றுமொரு உச்சபட்ச விலைக் கொண்ட காருடன் மோதியிருக்கின்றது. இந்த சம்பவம் பார்வையாளர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவேதான் விபத்தை ஏற்படுத்திய உடன் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்து வந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கின்றார்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இந்த விலையுயர்ந்த விபத்து சம்பவம் இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காம் அருகே உள்ள வால்சல் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து E&S எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டி வந்தவர் மீதே தவறு இருப்பதாக கூறியிருக்கின்றது. அதேசமயம், இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை என அது கூறியுள்ளது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இச்சம்பம் குறித்து மேற்கு மிட்லேண்ட்ஸ் போலீஸார் கூறுகையில், "இது மிகப்பெரிய விலையுயர்ந்த விபத்து. இதனால்தான் சம்பவம் நேர்ந்த உடன் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து நழுவியிருக்கின்றார்" என்றனர்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

முதலில் அக்காரின் உரிமையாளர் பற்றி தேடியபோது போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது. பின்னர்தான் அக்கார் ஓர் சொகுசு வாகன வாடகை நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதேசமயம், காரை வாடகைக்கு எடுக்கும்போது அந்த நபர் கொடுத்த புகைப்படம் வாடகை வாகன நிறுவனத்திடம் தற்சமயம் இருக்கின்றது. அது தற்போது போலீஸாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

ஆகையால், புகைப்படத்தைக் கொண்டு விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், அவர் தலைமறைவாகியிருப்பதால் அந்த மர்ம நபரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் அந்த நபரை பிடித்துவிடுவோம் என பர்மிங்காம் போலீஸார் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இந்த விபத்தில் இரு கார்களும் கணிசமான சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக உருஸ் காரின் பின் பகுதி சற்று கூடுதலாகவே சிதைந்து காணப்படுகின்றது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் காரும் அதிகளவில் சேதத்தைச் சந்தித்திருக்கின்றது. இக்காரின் முகப்பு பகுதி பெப்ஸி பாட்டிலை போல் முற்றிலுமாக நசுங்கிக் கிடக்கின்றது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் காரின் கிரில் மற்றும் பானெட் பகுதி அப்பளம் போல் நொறுங்கியிருக்கின்றது. தொடர்ந்து இந்த விபத்தால் காரின் அனைத்து ஏர் பேக்குகளும் விரிந்திருக்கின்றன. இதனை மீண்டும் பயன்படுத்த முடிாயது ஆகையால், அதனை மாற்றியே ஆக வேண்டும்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

ரோல்ஸ் காரின் ஏர்பேக்குகள் மிக மிக விலையுயர்ந்தவை ஆகும். ஆகையால், பல ஆயிரம் பவுண்டுகளை சேதத்தைச் சரி செய்ய செலவாகும் என கூறப்படுகின்றது. இதில் இருந்து தப்பிக்கவே ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு எடுத்து வந்தவர் தற்போது தலைமறைவாகியிருக்கின்றார்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

உலகின் பல்வேறு நாடுகளில் லம்போர்கினி உருஸ் கார் புகழ்பெற்ற மாடலாக திகழ்ந்து வருகிறது. லம்போர்கினி நிறுவனம் இதனை சூப்பர் எஸ்யூவி என கூறுகிறது. இதற்கு அக்காரின் சூப்பர் ஃபாஸ்ட் திறனே முக்கிய காரணியாக உள்ளது. இக்காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

அது அதிகபட்சமாக 641 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை எட்ட வெறும் 3.6 வினாடிகளே போதுமானதாக உள்ளது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 305 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவேதான் இக்காரை ஸ்போர்ட்ஸ் வாகன விரும்பிகள் தேடிப்பிடித்து வாங்கி வருகின்றனர்.

வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காரை லம்போர்கினி காருடன் மோதிய ஓட்டுநர்... பாவம் யாரு முகத்துல முழிச்சாரோ!!!

இதற்கு சற்றும் சலைக்காத ஓர் காராக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இருக்கின்றது. இக்கார் உலக பெரும் பணக்காரர்களின் கனவு காராக உள்ளது. இந்த காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது, அனைத்து சக்கரங்களும் திறனைக் கொண்ட வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rented Rolls-Royce Crashes Into Lamborghini Urus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X