பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் மிக பெரிய புரட்சியை செய்த ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசடர் மாடல் நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்றுள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

இந்தியாவில் 1990, 2000களில் பெரும்பான்மையான குடும்பங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிரதான மாடலாக ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசடர் விளங்கியது. தனி பயன்பாட்டை தாண்டி கமர்ஷியல் பயன்பாடுகளுக்கும் பலர் அம்பாசடர் காரை தான் தேர்வு செய்தனர்.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

இதனால் ஒரு சமயத்தில் கார் என்றாலே அது அம்சாடர் என்று தான் கூறுவர். இதன் கடைசி மாடல் கடந்த 2014ல் ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் இருந்து வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்ட அம்பாசடர் காரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தாஜிஷ் பி என்பவர் தனது யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள அம்பாசடர், 1982ல் வெளியான மார்க் 4 மாடல் ஆகும். இதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் விதமாக இதன் உரிமையாளர் இதனை மாடிஃபைட் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

என்ஜின் பகுதியில் இருந்து ஆரம்பமாகும் இந்த வீடியோவில் காரின் மொத்த என்ஜின் அமைப்பும் வயரிங், ஃப்யூஸ் மற்றும் ரீலேக்களால் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினிற்கு பின்புறத்தில் தூசி படிவதை தடுக்கும் வகையில் வளையாத தகரம் கொடுக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

இந்த பழைய அம்பாசடர் மாடலின் உரிமையாளர் இதன் சில பாகங்களை இந்த மாடலுக்கு பிறகு அறிமுகமான அம்பாசடர் க்ராண்ட் மாடலில் இருந்து எடுத்து பொருத்தியுள்ளார். சுமார் 17 வருடங்களுக்கு பிறகு புதிய பெயிண்ட் அமைப்பை இந்த கார் பெற்றிருந்தாலும், தற்போதும் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

க்ரில் மற்றும் பம்பரில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாததால் காரின் பழமையான தோற்றம் மாறவில்லை. காரின் பக்கவாட்டில் கதவுகளில் கூர்மையான முனைகளுக்கு பதிலாக மென்மையான லைன்கள் வழங்கப்பட்டுள்ளன. கண்ணாடிகள் கருப்பு நிறத்திலும் வழக்கமான ஸ்டில் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

பின்புற டெயில்லேம்ப் யூனிட் 1982ல் கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது எப்படி இருந்தோ அப்படியே தற்போதும் உள்ளது. உட்புறத்தில் கியர் லிவரின் பொஷிசன் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்புறத்தில் இருந்தது இந்த கஸ்டமைஸ்ட் காரில் தற்போதைய மாடல்களில் உள்ளதை போல் பொருத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

அம்பாசடர் மார்க் 4 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை அந்த சமயத்தில் ஹிந்துஸ்தான் நிறுவனம் பொருத்தி வந்தது. இந்த டீசல் என்ஜின் மூலமாக கார் அதிகப்பட்சமாக 37 பிஎச்பி பவரை பெற முடியும். வீடியோ, இந்த என்ஜின் மூலமாக கார் தற்போதும் சிறப்பான சத்தத்தை வெளிப்படுத்துவதை காட்டுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு புதிய தோற்றத்தை பெற்ற ஹிந்துஸ்தான் அம்பாசடர்...

இதனால் சிறப்பாக கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாசடர் மாடலுக்கு இந்த காரை நிச்சயம் உதாரணமாக கூறலாம். இந்த வீடியோவை பார்த்தாவது பழைய மாடல் கார்களை வீட்டில் பூட்டி வைத்திருப்போர் இவ்வாறான மாடிஃபைட் மாற்றங்களுக்கு உட்படுத்துவார்கள் என நம்புவோம்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
this gorgeously resto-modded Hindustan Ambassador
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X