116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

பல கடினமான சூழ்நிலைகளை கடந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது 116வது ஆண்டுவிழாவை கடந்த மே 4ஆம் தேதி கொண்டாடியுள்ளது. உலகின் பலரது கனவு வாகனங்களை தயாரித்து வரும் இந்நிறுவனத்தின் வரலாற்றை இந்த செய்தியில் சுருக்கமாக பார்ப்போம்.

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளர்களான ஹோன் சார்லஸ் ரோல்ஸ் மற்றும் சர் ஹென்றி ராய்ஸ் முதன்முறையாக 1904 மே நான்காம் தேதியில் தான் இங்கிலாந்து மான்செஸ்டரில் உள்ள மிட்லேண்ட் ஓட்டலில் சந்திந்தனர்.

MOST READ: சீட் நுனியில் அமர்ந்து பென்ஸ் கார் ஓட்டி வந்த 5 வயசு பொடியன்! சொன்ன காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

இந்த சந்திப்பு வெற்றிகரமான முடிவுக்கு வந்ததை அடுத்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அன்று முதல் உருவாக ஆரம்பமாகிவிட்டது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டின் மே 4ஆம் தேதியிலும் இந்நிறுவனம் தனது ஆண்டுவிழாவை கொண்டாடி வருகிறது. ரோல்ஸ் ராய்ஸை தோற்றுவித்தவர்களில் ஹென்றி ராய்ஸ் ஒரு பொறியியலாளர் ஆவார்.

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

சார்லஸ் ரோல்ஸ், மோட்டார் கார்களை விற்பதில் நோபல் பட்டம் பெற்றவர். இவர் முதல் சந்திப்பின்போது, உலகின் மிக சிறந்த பொறியியலாளரை சந்திந்துள்ளேன் என கூறி புதிய கார் நிறுவனம் உருவாகவுள்ளதை மற்றவர்களுக்கு உறுதிப்படுத்தினார். இந்த புதிய நிறுவனம் தான் ரோல்ஸ் ராய்ஸ்.

MOST READ: அஜாக்கிரதையாக செயல்பட்ட உபி எம்எல்ஏ... தக்க பாடம் புகட்டிய காவல்துறை... முதலமைச்சர் கண்டனம்!

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

116வது ஆண்டுவிழாவை குறித்து ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் டோர்ஸ்டன் முல்லர் ஹோட்வோஸ் கூறுகையில், நாம் தற்சமயம் வரலாற்றில் முக்கியமான காலத்தில் வாழ்கிறோம்.

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

இதனால் தற்போதைக்கு எங்களது முழு கவனம் மேற்கு சஸ்செக்ஸில் உள்ள ரோல்ஸ் ராய்ஸின் தாயகமான குட்வுட்டில் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் மீண்டும் தயாரிப்பு பணிகளை துவங்குவதில் தான் உள்ளது. இருப்பினும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிறப்புமிக்க 116 ஆண்டுகால அனுபவத்தை இந்த நேரத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

MOST READ: ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் காரை களமிறக்க எம்ஜி மோட்டார் திட்டம்!

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

இந்த காலக்கட்டத்தில் நிறுவனம் பல இக்கட்டான சூழ்நிலையை தாண்டி தனது ஆற்றலை பெருக்கி கொண்டுள்ளது. அத்தகைய நேரங்களில் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் எங்களது தன்னம்பிக்கை தான் வெளிப்பட்டது. தற்போதைய மோசமான சூழ்நிலை நாங்கள் எதிர்பார்க்காதது தான்.

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

ஆனால் உலகின் எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் இல்லாத அளவிற்கு எதிர்காலத்தை பற்றிய திட்டங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சரியாக வகுத்து வைத்துள்ளது என கூறினார். டோர்ஸ்டன் முல்லர் கூறியது போல ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த 116 ஆண்டு காலத்தில் பல நெருக்கடியான சூழலை கடந்து வந்துள்ளது.

MOST READ: கொரோனா எதிரொலி... இனி விமானங்களில் பயணிக்க பாஸ்போர்ட்போல் இதுவும் கட்டாயம்... என்ன தெரியுமா?

116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...?

இதில் 1918ல் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிய ஸ்பெனிஷ் காய்ச்சல், பெரும் மந்தநிலை, 2008ல் மிக பெரிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு & உலகளவில் சில பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை அடங்கும். இதனால் தற்போதைய கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Rolls Royce recently shared that it celebrated the 116th anniversary of a critical milestone in its history
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X